மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊதிய மறு நிர்ணயம்.. பணியாளர் சங்கம் எதிர்ப்பு.. முதல்வரிடம் கோரிக்கை மனு

அரசிடம் இருந்து பெறும் நிதியை குறைத்து பல்கலையின் மாண்பிற்கும், செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்களின் ஊதிய மறு நிர்ணயம் மற்றும் ஊதிய பிடித்தம் ஆகியவை தொடர்பாக ஆட்சிக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும், நடைமுறையில் உள்ள ஊதிய விகிதம் தொடர வேண்டும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்களின் ஊதியம் சமீபத்தில் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு மேலும் ஊதியத்தில் பின் தேதியிட்டு பிடித்தம் செய்வதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானங்கள் ஆட்சிக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தரின் இந்த முடிவு பல்கலைக்கழக ஊழியர்கள் இடையே விமர்சனத்தை சந்தித்து உள்ளது. இந்த முடிவை உடனே கைவிட வேண்டும், பழைய ஊதிய விகிதம் தொடர வேண்டும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்க தலைவர் முருகன் மற்றும் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதிய மறுநிர்ணயம் செய்யும் பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் தலையிட்டு, தொடர்ந்து 20-30 ஆண்டுகள் பணி செய்துவரும் அலுவலர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டுவரும் துணைவேந்தர் அவர்களுக்கு தகுந்த உத்தரவினைப் பிறப்பிக்கும்படியும், மேலும் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி இயங்கிவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவையில் 30-03-2022 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிலைநிறுத்தித் தரும்படி ( status quo be maintained ) மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
மேல்முறையீட்டு மனு குறித்த பின்வரும் தகவல்களை தங்களின் கனிவான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஊதியம்

ஊதியம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களால் 28-09-2022 நாளிட்ட உத்தரவாதக் கடிதம் அரசிடம் நிதிபெறும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதக் கடிதம் ஒட்டுமொத்த பல்கலைக்கழக ஊழியர்களின் நலனை பாதிக்கும் விதமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.53.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. அதற்காக அரசாணை எண்.282 13-10-2022 அன்று வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தரவாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை 20-01-2023 அன்று நடந்த ஆட்சிக்குழுவில் ஏற்கப்பட்டதாக தெரிய வருகிறது. துணைவேந்தர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி உத்தரவாதமானது, ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட நிதிக்குழு, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை தீர்மானங்களுக்கு முரணாக உள்ளது.

தீர்மானம் தவறு

கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணிபுரியும் 50 அலுவலர்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிதிக்குழு, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை ஒப்புதலோடு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 22.3.2022 அன்று நடைபெற்ற நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில், அனைத்து பல்கலை நிதி அலுவலர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யவும் மேலும் ஊதியத்தில் பின் தேதியிட்டு பிடித்தம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அறிந்து அலுவலர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் உள்ளாயினர். அலுவலர்களின் அனைத்து பதவி உயர்வும் சரி அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமும் சரி 1.1.1996 பல்கலை அனுமதிக்கப்பட்ட பதவி மற்றும் ஊதிய அளவுகோலில் உள்ளபடியே வழங்கபட்டுவருகிறது.

 உடனே மாற்ற வேண்டும்

உடனே மாற்ற வேண்டும்

ஆனால் உள்ளாட்சி தணிக்கை துறை தடைகளை ஏற்படுத்தி அரசிடம் இருந்து பெறும் நிதியை குறைத்து பல்கலையின் மாண்பிற்கும், செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக உள்ளது.
7வது ஊதியகுழுவின் பரிந்துரையை அமுல்படுத்தும் சூழ்நிலையில் 02.02.2018 60T MI அன்று நடந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதிக்குழுவில் அன்று பதவியில் இருந்த நிதிசெயலரும், உயர்கல்வித்துறை செயலரும் தமிழக அரசின் கடித எண் 174 மற்றும் தணிக்கை தடைகள் அனைத்தையும் பரிசீலித்து பணியில் உள்ள அலுவலர்கள் அனைவருக்கும் பல்கலையில் அனுமதிக்கப்பட்ட ஊதிய அளவுகோலில் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துவது என்றும் மேலும் இந்த தேதிக்கு பிறகு பணி நியமனம் ஆகும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் ஊதிய விகிதத்தை அமுல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் 13.03.2018 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அமுல்படுத்தப்பட்டது.இந்த சூழ்நிலையில் 04.03.2022 நிதி அலுவலர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடைமுறைகளை செயல்படுத்துவது என்பதுகொள்கை முடிவாகாது.

கொள்கை முடிவு அல்ல

கொள்கை முடிவு அல்ல

மேலும் ஊதிய மறுநிர்ணயம் மற்றும் ஊதிய பிடித்தம் என்பது 2.2.2018 மற்றும் 13.3.2018 நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்திற்கு முரணானது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைக்கூற்றுகளின் அடிப்படையில் 30-03-2022 அன்று நடந்த ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில், ஊழியர்களின் ஊதிய மறு நிர்ணயம் மற்றும் ஊதிய பிடித்தம் தொடர்பான 22-03-2022 ஆட்சிக்குழு தீர்மானத்தை திரும்பப் பெறுவது (withdrawn) என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 02-02-2018 நாளிட்ட நிதிக்குழு மற்றும் 13-03-2018 நாளிட்ட ஆட்சிகுழு தீர்மானங்களின்படி ஊதிய விகிதங்களைத் தொடர்ந்து வழங்கிட (status quo be maintained) வேண்டும் maintained) வேண்டும் என்று பெரும்பாண்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாண்புமிகு மக்கள் முதலமைச்சர், சுமார் 1000 ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்விதமாக 30-03-2022 நாளிட்ட ஆட்சிப்பேரவைத் தீர்மானத்தை நிலைநிறுத்தும் உத்தரவினை, பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+