மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் திடீர் ராஜினாமா.. ஆளுநருக்கு கடிதம்!
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஜெ. குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாகவும், யாருடைய நிர்பந்தம் இன்றியும் தான், பதவி விலகுவதாக துணைவேந்தர் ஜெ.குமார், தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் துணைவேந்தர் பதவியில் இருந்து ஜெ.குமார் விலக்கிக் கொள்ளப்படுவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும் தங்களது சம்பளத்தை சரிவர வழங்கக் கோரியும், முன்னாள் பேராசிரியர்கள் ஓய்வூதியத்தை முறையாக வழங்கவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்தச் சூழலில் தான் தனது உடல் நிலையை காரணம் காட்டி, துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார் ஜெ.குமார். பதவி காலம் முடிவடைய இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலையில் துணைவேந்தர் ஜெ. குமார் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications