பார்வையற்ற கவிதா.. கண்ணெதிரே ஜோடியின் அட்டகாசம்.. கடைசியில உறைந்த உசிலம்பட்டி.. குலுங்குது மதுரை
மதுரை: 2 நாட்களாகவே மதுரை சம்பவம், பொதுமக்களை உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது.. கண்ணை மறைக்கும், இந்த கள்ளக்காதலுக்கு ஒரு அளவே இல்லாமல் அட்டகாசம் பெருகிவிட்டது..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா.. பார்வை மாற்றுத்திறனாளி.. கண்ணையும் இழந்தவர்.. கணவனையும் இழந்தவர் கவிதா. ஒரே மகள் இருக்கிறார்.. பிளஸ் 2 படிக்கிறார். மகளின் வாழ்க்கையாவது ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உசிலம்பட்டியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்..

சக்கிமங்கலம்: இவருடன் தற்போது யாருமே இல்லை.. சக்கிமங்கலம் அருகேயுள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாகவே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், கவிதா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி கிடந்தது.
தகவலறிந்த சிலைமான் போலீஸார், கவிதாவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.. சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். கவிதாவின் கழுத்தில் 10 பவுன் சங்கிலி காணாமல் போயிருந்தது.. செயின், மோதிரம், கம்மல், செல்போன் போன்றவையும் திருடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, போலீசார், கவிதா வசித்து வந்த தெருவில் உள்ளவர்களை கண்காணித்தனர்.
மதுரை: அப்போது, கவிதா கொலை செய்யப்பட்டதுமே, கவிதா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் சிவானந்தம் என்பவரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென வெளியூருக்கு கிளம்பி சென்றார்கள். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து, அவர்களை பற்றின விசாரணையில் இறங்கினார்கள். அப்போதுதான், சிவானந்தம் - கலையரசி இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது.
கவிதா தனியாக வசித்து வந்ததால், அடிக்கடி இவரது வீட்டில் கலையரசியும், சிவானந்தமும் சந்தித்து தனியாக பேசிவந்திருக்கிறார்கள்.. ஒருமுறை கலையரசி சிவானந்தத்திடம், தனக்கு நகை வேண்டும் என்று கேட்டுள்ளார்..
நகைகள்: சிவானந்தத்திடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்பதால்,கவிதாவை கொன்றுவிட்டு, அவரது நகைகளை திருடிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படியே சம்பவத்தன்றும் கவிதா வீட்டுக்கு சென்ற காதல் ஜோடி, கவிதாவை கொடூரமாக கொன்றுவிட்டு, அவரது நகைகளையும் திருடிக்கொண்டு, வெளியூருக்கு நழுவியது தெரியவந்தது.
இதற்கு பிறகுதான், கலையரசி, சிவானந்தத்தை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.. 2 பேரையுமே கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளது..
பார்வைத்திறன்: பார்வைத்திறனை இழந்த கவிதாவுக்கு 50 வயதாகிறது.. டேனியல் ஆறுமுகம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அரசுப் பள்ளி இசை ஆசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், 3 வருடங்களுக்கு முன்புதான், கவிதாவின் கணவர் டேனியல் வீட்டில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த 3 வருடமாகவே, அக்கம்பக்கத்தினர் உதவியோடுதான் கவிதா, சொந்த வீட்டில் தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்றும், எல்லாரிடமும் பேசிவிட்டுதான் தூங்க போனாராம். மறுநாள் மதியம் வரை கவிதா வீட்டை விட்டு வெளியே வராததால், அருகிலிருள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்தபோதுதான், கை, கால்களை கட்டி, அவரை கொன்றுள்ளது தெரியவந்தது.
கணவர்: கைதாகி உள்ள கலையரசிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. கணவர் இறந்துவிடவும், மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான், சிவானந்தத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. கலையரசிக்கு கொஞ்சம் கடன் இருந்ததாலும், நகைகள் மீது பிரியம் இருந்ததாலும் கவிதாவை கொன்றுவிட முடிவெடுத்துள்ளனர்.
அன்றையதினம், பார்வையற்ற கவிதா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருவதற்குள் சிவானந்தம் & கலையரசி இருவருமே கவிதா வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார்களாம்.
கவிதா: கவிதா வீட்டிற்குள் நுழைந்ததுமே, அவரது வாயில் துணியை திணித்து நகையை பறித்தபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது தலையில் அடிபட்டு மயங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் கை, கால்களை கட்டிப்பட்டு நகையை திருடிஉள்ளனர். ஏற்கனவே தந்தையை இழந்த கவிதாவின் மகள், இப்போது தாயையும் பறிகொடுத்துவிட்டு கதறியழுது கொண்டிருக்கிறார்...!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications