மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து..3 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்
மதுரையில் சரவணா ஸ்டோர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கடையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மதுரை: மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 9வது மாடியில் தீ கொளுந்து விட்டு எரிவதால் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்து ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுவதோடு தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது. வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. கீழ் தளத்தில் நகைக்கடையும், மேல் தளங்களில் ஜவுளி கடையும், அதற்கு மேல் உணவகங்களும் உள்ளன.
இந்த நிலையில் இன்றைய தினம் சரவணா ஸ்டோர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 9வது மாடியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதனையடுத்து கடைசியில் இருந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் 3 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே வருவதற்கும் ஊழியர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 2க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 108 அம்புலன்ஸ் சேவையும் வரவழைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்துள்ளதால் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து மாட்டுத்தாவணி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications