மதுரையை மிரள வைத்த ஊழல்.. கண் சிவந்த ஸ்டாலின்! மேயர் பதவியை துறந்த இந்திராணி! அடுத்தது யார்?
மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் முதல் குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து நாளை மதுரையின் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்கான கூட்டமும் நடைபெறவுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் கடவுச்சொற்களை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்தது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அப்போதிருந்த ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.

மதுரை மாநகராட்சி
இதற்கிடையே விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், விசாரணையை துரிதப்படுத்தினார். இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வரி முறைகேடு
மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
டிஐஜி அபிநவ் குமார்
தொடர் விசாரணையின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உதவி ஆணையாளராக சென்று பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிரமான விசாரணை நடத்தி அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்தனர்.
மேயர் இந்திராணி
இதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரி முறைகேடு காரணமாக நடைபெற்று வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக நாளை அவசர கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெறுகிறது. தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மேயர்
இந்த நிலையில் அவரது ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் மதுரையின் புதிய மேயர் யார்? என்பது குறித்த விவாதம் நடத்தப்பட்டு புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார். பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் அடுத்த மேயர் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications