அமைச்சர் பிடிஆர் முன்பே.. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் ஏற்கப்பட்ட உறுதிமொழி
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தி மொழிதான் இணைப்பு மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசியிருந்தார். ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி என்றும் தெரிவித்திருந்தார். இது தென்னிந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் நடிகர் சங்க விழா ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரஹ்மானிடம் இந்திதான் இணைப்பு மொழியா என கேட்டதற்கு அவர், தமிழ்தான் இணைப்பு மொழி என்று தெரிவித்தார்.

யாஷ்
இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றி குறித்து தனது ட்விட்டரில் கன்னட நடிகர் சுதீப் பதிவிடுகையில இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் இநதியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். நாங்கள் அனைத்து இடங்களிலும் வெல்கிறோம் என்றார்.

நடிகர் அஜய் தேவ்கன்
இதற்கு பதிலளித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்து கொடுக்கிறீர்கள். இந்திதான் எப்போதுமே நம் தாய்மொழி. அது எப்போதும் இருக்கும் என அதிர்ச்சிக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

வார்த்தை போர்
இரு நடிகர்களும் மொழி குறித்த விஷயத்திற்கு மாறி மாறி வார்த்தை போர் நடத்திய நிலையில் பெரும்பாலானோர் யாஷிற்குதான் ஆதரவு தந்தார்கள். அது போல் இயக்குநர் ரஞ்சித்தும் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். இதற்கு அடுத்து கங்கனா ரணாவத் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவு
பொதுவாக அவர் எல்லா விஷயங்களிலுமே பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார். அந்த வகையில் கங்கனாவும் சமஸ்கிருதம்தான் தமிழை காட்டிலும் பழமையான மொழி. எனவே நம் நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஓயாத இந்தி
இப்படியாக ஓயாமல் இந்தி குறித்து கருத்துகளும் சர்ச்சைகளும் உருவாகி வரும் நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது 250 முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமஸ்கிருத உறுதிமொழி
இதுகுறித்து அந்த கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கூறுகையில் பொதுவாக முதலாமாண்டு மாணவர்களை கல்லூரியின் மாணவர் தலைவர்தான் வரவேற்பார். அவர் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த உறுதிமொழியை நகல் எடுத்து கொடுத்து வாசித்தார்.
Recommended Video

சமஸ்கிருத வார்த்தைகள்
அந்த ஆங்கில உறுதிமொழியில் சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. இதை அந்த மாணவர் தலைவர் கல்லூரி நிர்வாகத்திடம் காண்பிக்கவில்லை. எங்களுக்கு எப்போதும் ஹிப்போகிரேடிக் உறுதிமொழியின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது. இது தவறுதலாக நடந்துள்ளது என்றார். எனினும் இதுகுறித்து முதல்வர் ரத்தினவேலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications