ஒருவழியாக.. சூடு பிடிக்கும் மதுரை மெட்ரோ பணிகள்.. திடீரென மாற்றப்பட்ட ரூட்.. எங்கே வருது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமங்கலத்தில் அமைக்கப்பட உள்ள உயர்மட்ட மதுரை மெட்ரோ பாதைக்கான தூண்கள் மற்றும் நிலையங்களை மாற்றுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சிப்காட் தொழில்பூங்கா மற்றும் தோப்பூர் சந்திப்புகளில் கீழ்மட்டப் பாலங்களை அமைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால் மெட்ரோ திட்டத்தில் சில மாற்றங்கள் நடக்க உள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) திட்ட இயக்குநர் டி. அர்ச்சனன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து சாத்தியமான வழித்தட மாற்றங்களை ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதை மாற்றப்படுமானால், நிலம் கையகப்படுத்துதலும் தேவைப்படலாம் என அவர் தெரிவித்தார்.

coimbatore metro

32 கிலோமீட்டர் நீளமுள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டம், 26 நிலையங்களுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மதுரை நகரின் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கைகள் அமைச்சரவைக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மதுரை மெட்ரோ திட்டத்தின் ரூட்

மதுரையில் மெட்ரோ அமைக்க பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.

சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும். இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.

திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.

மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின்சிம்மக்கல் வழியாக ஒரு ரூட்
செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+