எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டோம்.. பிரதமர் என்றும் பார்க்காமல்.. அதுதான் கருப்பு.. சு.வெ. ட்வீட்!
மதுரை: பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரதமர் மோடி
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிலர் விரக்தியில் பிளாக் மேஜிக்கை நாடுகிறார்கள். பிளாக் மேஜிக்கை அவர்கள் பிரசாரம் செய்ய முயற்சித்ததை ஆகஸ்ட் 5ம் தேதி பார்த்தோம்.

பிளாக் மேஜிக்
கறுப்பு ஆடை அணிவதன் மூலம் கடினமான காலத்தை கடந்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பிளாக் மேஜிக் செய்தாலும், மூடநம்பிக்கைகளை நம்பினாலும், மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியையும் அவர்களின் போராட்டத்தையும் மறைமுகமாக சாடினார்.

காங்கிரஸ் பதிலடி
பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி, பாஜகவின் சுரண்டலை மறைக்க பிளாக் மேஜிக் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விமர்சித்தார்.

சு.வெங்கடேசன் ட்வீட்
இந்த நிலையில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம். ஆனாலும் பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அது தான் கருப்பு என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications