பொங்கலுக்கு கோரிப்பாளையம் பாலம் திறக்கப்படும்.. மதுரை மொத்தமா மாறப்போகுது.. எவ வேலு கொடுத்த அப்டேட்!
மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். மேலமடை மேம்பாலம் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறிய எவ வேலு, டிசம்பர் 7ஆம் தேதி அது முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளை திமுக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில், பல்வேறு திட்டங்களை முடித்து திறந்து வைக்க ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் மதுரையில் 2 பகுதிகளில் முக்கியமான மேம்பால பணிகள் நடந்து வருகிறது. மேலமடை மேம்பாலம் மற்றும் கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை அமைச்சர் எவ வேலு தீவிரப்படுத்தி இருக்கிறார். இந்த இரு மேம்பாலத்தின் பணிகளையும் அமைச்சர் எவ வேலு 9வது முறையாக ஆய்வு செய்தார். இதன்பின் இந்த 2 மேம்பாலங்களும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
அதில் எவ வேலு பேசுகையில், மதுரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அடைப்படையில் மேலமடை மேம்பாலத்திற்கு ரூ.150 கோடியும், கோரிப்பாளையம் மேம்லாபத்திற்கு ரூ.190 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 950 மீட்டர் கொண்ட மேலமடை பாலப் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
இனி பெய்ண்ட், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகளே உள்ளன. இந்தப் பணிகாள் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் நிறைவடையும். இந்தப் பாலத்தை வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதேபோல் கோரிப்பாளையம் பாலப் பணிகள் நில எடுப்பு பிரச்சனையால் தாமதமாகி இருக்கிறது.
இந்தப் பாலத்தின் பணிகளை வரும் பொங்கல் பண்டிகைக்குன் முன் நிறைவடையும். இதனையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைப்பார். இதனை வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கூறியுள்ளேன். மேம்பால பாதுகாப்புக்கு என்று தனி குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே திறக்கப்பட்டு வருகிறது.
இந்த இரு பாலங்களையும் கட்டி முடித்துவிட்டு மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் இடையிலான உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதன்பின் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்த மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவார் என்பது உறுதியாகி இருக்கிறது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications