மதுரை சர்வேயர் ஜோதிக்கு குபீர் ஆசை.. அதுக்குன்னு பஸ் ஸ்டாண்டிலேயா? உடனே வந்துட்டாங்க பேரையூர் போலீஸ்
மதுரை: பேரையூர் அருகே நிலத்தை சர்வே செய்த சான்றிதழை வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இதை தடுப்பதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் தமிழக பதிவுத்துறை முன்னெடுத்து வருகிறது.

எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி, ஆங்காங்கே கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.
பெண் அதிகாரிகள்: லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும்கூட, பெண் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. இதோ மதுரை சர்வேயரும் சிக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.. இவருக்கு 73 வயதாகிறது.. இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருக்கிறார்..
சர்வேயர்: மேலும், இதுகுறித்து பேரையூர் தாலுகா, சேடபட்டி குறுவட்ட சர்வேயர் ஜோதி என்பவரையும் சந்தித்து, தன்னுடைய தனது இடத்தை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று ராமசாமி கேட்டுள்ளார்..ஆனால்,ஜோதியோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வந்திருக்கிறார்.. கடந்த 6ம் தேதிதான், ராமசாமியின் நிலத்தை அளந்துள்ளார்.
ஆனாலும், அதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை தருவதற்கு ராமசாமி விரும்பவில்லை.. ரூ.2 ஆயிரம் கொடுக்க சம்மதித்தாலும், தன்னுடைய சொந்த நிலத்திற்கு ஏன் லஞ்சம் தர வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதனால், சர்வேயருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார்.
பஸ் ஸ்டாண்டு: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் யோசனைப்படி, பேரையூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று சர்வேயர் ஜோதியிடம் ரூ.2 ஆயிரத்தை ராமசாமி கொடுத்தார். அப்போது, அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி-யான சத்யசீலன் தலைமையிலான போலீஸார், ஜோதியை கையும், களவுமாக பிடித்தனர்... தொடர் விசாரணைக்குப் பிறகு ஜோதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். பெண் அதிகாரி இப்படி பகிரங்கமாக சிக்கியிருப்பது, மதுரையில் பெரும் அதிர்ச்சியை தந்துவருகிறது.
மீனாட்சி: இதே பேரையூரில் கடந்த வாரம்தான் இன்னொரு பெண் அதிகாரி கைதானார்.. தாலுகா சின்னாரெட்டிபட்டியில் பட்டா மாறுதலுக்கு மொகைதீன் ஷெரீப் என்பவரிடம் ரூ.6000 லஞ்சம் கேட்டாராம் பெண் விஏஓ மீனாட்சி.. இத்தனைக்கும் ஒருபைசாகூட குறைக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
"பார்ப்போம்" எனகூறிச்சென்ற முகமது ஷெரீப்பை போனை போட்டு பேசிய மீனாட்சி, "பணத்தை கொண்டு வாருங்கள், பட்டா மாறுதல் செய்வதற்கு" என்றாராம். ஆனால், முகமது ஷெரீப் நேராக போலீசுக்கு போய்விட்டார். அனைவரது முன்னிலையிலும் மீனாட்சி கைதானது, பேரையூரில் பெரும் அதிர்ச்சியை தந்தது. இப்போது இன்னொரு பெண் அதிகாரி, இதே பேரையூரில் கைதாகியிருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications