நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகத்தின் கால்களை உடைக்க கூலிப்படை ஏவியதாக மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது
மதுரை: நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் மீது தாக்குதல் வழக்கில் ஏற்கெனவே 6 பேர் கைதான நிலையில் தற்போது பாஜக நிர்வாகி ஒருவரும் அவருடைய ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர் வெங்கடேஷ் ஆறுமுகம். இவர் சன்டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர், அது போல் விஜய் டிவியில் கலக்க போவது யாரு சீசன் 2 சாம்பியனாக வென்றார்.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வருகிறார். இவர் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு தொழில்களையும் செய்து வருகிறார். மேலும் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் ரீதியாக நையாண்டித்தனமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மதுரையில் வெங்கடேஷ் ஆறுமுகத்தை சிலர் காரில் கடத்தில் நாராயணாபுரம் கண்மாய் பகுதிக்கு கொண்டு சென்று அவரை கடுமையாக தாக்கியதோடு அவரது இரு கால்களையும் உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது அவர்கள் காவித் துண்டை அந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அந்த துண்டை எடுத்துக் கொண்டு தல்லாங்குளம் உதவி ஆணையர் ஜெகன்நாதனிடம் வெங்கடேஷ் நடந்தவற்றை கூறி ஒரு புகாரை கொடுத்தார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜகவுக்கு எதிராக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்ததால் அவர்கள் வெங்கடேஷை தாக்கியிருக்கலாம் என கருதப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேல பனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (37), பாஜக 28 வது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவரான செல்லூரை சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான கோசா குளத்தை சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் வைரமுத்துதான் தனது கூட்டாளிகளை கொண்டு வெங்கடேஷை தாக்கினார்.
விசாரணையில் வெங்கடேஷுக்கு தனது மனைவி பானுமதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வெங்கடேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் பானுமதி, கார் ஓட்டுநர் புதூர் மோகனை வைத்து வெங்கடேஷின் காலை உடைக்க சதி திட்டம் தீட்டியுள்ளார்.
இதனால் மோகன் தனது நண்பர்களான பாஜகவை சேர்ந்த ஆனந்தராஜ், மலைச்சாமி, வைரமுத்து மற்றும் ராஜ்குமார் என்பவர் மூலம் வெங்கடேஷை காரில் கடத்தி கண்மாய் அருகே கடுமையாக தாக்கி கால்களை உடைத்துள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் போலீஸார் பானுமதி, மோகன், வைரமுத்து, மலைச்சாமி, ஆனந்த்ராஜ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
வெங்கடேஷின் மனைவி பானுமதியிடம் ரூ 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு கூலிப்படையை ஏவியதாக மேலும் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாஜக விளையாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் தமிழ்ச்சங்கு ஆவார். இவருடைய கூட்டாளி துளசிராமனையும் மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூலிப்படையை ஏவ காரணமாக இருந்த தமிழ்ச்சங்கும் துளசியும் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications