மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகுதியில்லாதவர்! புற்றுநோய்! அதிமுகவில் சேர்க்க முடியாது ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த ராஜன் செல்லப்பா

ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது- ராஜன் செல்லப்பா

Google Oneindia Tamil News

மதுரை: தகுதியில்லாத ஆட்களை சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் வருவதை போல அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது என மதுரை ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பணி, ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலைக்கு உரிமை கோரி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தார்.

பாஜகவை மலைபோல நம்பிய ஓபிஎஸ்.. திக்கு தெரியாத திசையில் தர்ம யுத்த நாயகனின் அரசியல் எதிர்காலம்? பாஜகவை மலைபோல நம்பிய ஓபிஎஸ்.. திக்கு தெரியாத திசையில் தர்ம யுத்த நாயகனின் அரசியல் எதிர்காலம்?

வேட்பாளர்

வேட்பாளர்

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிபதிகள் கூறுகையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் சொல்கிறது. பொது வேட்பாளரை நிறுத்தினால் தான் கையெழுத்திடுவதாக ஓபிஎஸ் கூறுகிறார். எனவே இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பொதுக் குழுவை கூட்டி பொது வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். இதற்கு ஓபிஎஸ் தரப்பையும் அழைக்க வேண்டும். பொது வேட்பாளரை தேர்வு செய்துவிட்டு அந்த படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ்ஸுக்கு அனுப்ப வேண்டும். அதில் அவர் கையெழுத்திடுவதும் இடாததும் அவருடைய விருப்பம் என தெரிவித்தது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்

இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அண்ணாமலை வாபஸ் பெற சொன்னார். அதன்படி அவரும் வாபஸ் பெற்றாகிவிட்டது. மேலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியதாகவே கருதப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம்

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினருமான ராஜன் செல்லப்பா அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்த நிர்வாகிகளுடன் உச்சநீதிமன்றம் இரட்டை இலை விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்தும் அவர் கலந்தாலோசிக்கப்பட்டது.

ராஜன் செல்லப்பா

ராஜன் செல்லப்பா

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தென்னரசுவை வெற்றி பெற செய்ய கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. திமுகவை வலிமையுடன் எதிர்க்கக் கூடிய சக்தி எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே உள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிலர் தங்களுக்கு ஏற்றவாறு வலைத்திருக்கிறார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். உச்சநீதிமன்றத்தில் நிரந்தர தீர்ப்பு வழங்கவில்லை. தற்போது கொடுத்துள்ளது இடைக்கால தீர்ப்புதான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். தேர்தல் ஆணையம் இன்னும் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி இல்லை என அங்கீகரிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள்

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள்

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை சிறப்பாக செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர், வெற்றியை தவறாகவும் அவர் கொண்டாடுவதில்லை, திமுகவை வீழ்த்த எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை பார்க்கிறோண். அதிமுக என்பது பொதுக் குழுவினால் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சபட்ச பதவி. இரட்டை இலை சின்னத்தை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால் நாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதுதானே கேள்வி. அது எடப்பாடி பழனிசாமிதான்.

எதிரி திமுகதான்

எதிரி திமுகதான்

அதிமுகவின் முழுமையான எதிரி திமுகதான். திமுகவிற்கு அதிமுகதான் எதிரி. எங்களை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியே இல்லை. எடப்பாடி எனும் ராஜதந்திரி எங்களிடம் இருக்கிறார். சிலர் கூட்டு சேர்ந்தால் வாக்குகள் கிடைக்காது, மைனஸ்தான் ஆகும். தகுதியில்லாத தலைமையை கூட்டு சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோ வருவது போல். எனவே ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்க்க கூடாது என்பதை அவரது பெயரை போடாமல் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

English summary
MLA Rajan Chellappa criticises OPS is like cancr cell who couldnt be in AIADAMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X