ஹைடெக் கழிப்பறை, ஸ்மார்ட் பார்க்கிங்.. மொத்தமாக மாறப்போகும் மாட்டுத்தாவணி.. உற்சாகமான மதுரை மக்கள்!
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக மேற்கூரையை அகற்றி, புதிதாக வட்ட வடிவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் விமான நிலையங்களில் காணப்படுவதை போல் ஹைடெக் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
மதுரையின் முக்கிய அடையாளமான திகழ்வது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். 1999ஆம் ஆண்டு மதுரையில் திறக்கப்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், தமிழ்நாட்டில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையமாக இருந்து வந்தது. ஆனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பராமரிக்காமல் கைவிட்டதால், நாளடைவில் அந்த சான்றிதழை இழந்தது.

அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பின் மிகப்பெரிய பேருந்து நிலையமாகவும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திகழ்ந்து வந்தது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், திருச்சி பேருந்து நிலையம், சேலம் பேருந்து நிலையம் ஆகியவை திறக்கப்பட்ட பின், மதுரைக்கும் புதிய பேருந்து நிலையம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையராக சித்ரா வந்த பின், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் முடிவை எடுத்துள்ளார். இதற்கு முன்பாக பலமுறை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கப் போகிறோம் என்று கூறி இருந்தாலும், எந்தப் பணிகளும் நடக்கவில்லை. ஆனால் இம்முறை புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ.15 கோடி மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை அகற்றிவிட்டு, புதிய மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 8 நடைமேடைகள் இருக்கும் நிலையில், அனைத்திலும் உள்ள மேற்கூரைகள் இடிக்கப்பட்டு அதன்பின் உயர்த்தை 40 செமீ அதிகரித்து புதிய கான்க்ரீட் மேற்கூர வட்ட வடிவில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விமான நிலையங்களில் உள்ளதை போல் ஹைடெக் வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளன. மாட்டுத்தாவணி பேருந்து நிலைய கழிப்பறைகள் முற்றிலும் அடிக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 7 மற்றும் 8 ஆகிய நடைமேடைகளின் மேற்கூரை இடிக்கப்பட உள்ளன. இதனால் அங்கு பேருந்துகளை நிறுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்மார்ட் பார்க்கிங், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் கழிவுநீர், மழைநீர் வடிவால் வசதிகள் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. இதனை மொத்தமாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் விரைவில் புதிய மாற்றம் பெரும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications