எலே பேதில போவான்.. அதென்னப்பா தர்பூசணி பரோட்டா! சேட்டையை ஆரம்பித்த மதுரையன்ஸ்! ஓ.. அவரோட ஐடியாவா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழமான தர்பூசணியில் ரசாயன கலப்பு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், அதன் விலையும் விற்பனையும் கடுமையாக சரிந்தது. இந்த நிலையில் தர்பூசணி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் தர்பூசணி பரோட்டா பிரபலமாகி வருகிறது. மதுரை என்றாலே பரோட்டா தான் என்ற நிலையில் தற்போது தர்பூசணி பரோட்டா சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

வெயில் நேரங்களில் பயணம் செய்பவர்கள் ஐஸ்க்ரீம், கரும்பு ஜூஸ், தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் சாலையோரங்களில் அவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மொத்தமாக தர்பூசணி பழங்களை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

Madurai Watermelon Parotta

இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு சில வியாபாரிகள் தர்பூசணி பழங்களின் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்வதாக திடீரென தகவல் பரவியது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

இந்த நிலையில் தர்பூசணி பழங்களின் விற்பனையும் கடுமையாக சரிந்தது. இதற்கிடையே தர்பூசணி பழத்தின் விற்பனை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், தர்பூசணி பழங்களின் விற்பனையை சீர்குலைத்து குளிர்பானங்களை குடிக்க வைக்கவே இந்த வதந்தி பரப்பப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தர்பூசணி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் தர்பூசணி பரோட்டா பிரபலமாகி வருகிறது.

மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாச நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி பரபரப்புக்குள்ளாக்கியவர் டெம்பிள் சிட்டி குமார். அவ்வப்போது முக கவசம் போன்ற வடிவில் புரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்தும் வழக்கம்.

இந்நிலையில், தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் டெம்பிள் சிட்டி உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம்: அடிக்கிற வெயிலுக்கு ஆனந்தமாய் சுவைத்திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர், ஆகா ஓகோ அருமை அண்ணா உங்களுக்கு இப்படியெல்லாம் எப்படி ஐடியா தோன்றுகிறது என ஹோட்டல் உரிமையாளரை குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வருகின்றனர்.

மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில் திடீரென தர்பூசணி பரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை புரோட்டா மாவின் மீது வைத்து அதன் மீது எண்ணெய் ஊற்றி அதனை பொறித்து பீட்சா போல கட் பண்ணி கொடுப்பது போன்ற வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. தர்பூசணி சீக்கிரம் ஜீரணமாகும். ஆனால் பரோட்டா ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். இந்த மாதிரி இரண்டு உணவு வகைகளை ஒன்றாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வரலாம். குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம் என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+