மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸ்.. திறப்பு விழா நாளில் இருந்தே சிக்கல்தான்..வாஸ்து சரியில்லையோ
மதுரை மாட்டுத்தாவணி அருகே கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்ற நாளில் இருந்தே சிக்கலை சந்தித்து வருகிறது.
மதுரை: எந்த கடை என்றாலும் வியாபாரம் நன்றாக செழித்து வளர வேண்டும். தூங்கா நகரமான மதுரையில் பல ஜவுளிக்கடைகளிலும் வியாபாரம் பிரம்மாண்டமாக நடைபெறும். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பல ஜவுளி நிறுவனங்கள் மதுரையிலும் தங்களின் கிளை நிறுவனங்களை திறக்க அதுதான் காரணமாக இருந்தது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடை கடந்த சில மாதங்களாகவே சிக்கல்களை சந்தித்து வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூப்பர் சரவண ஸ்டோர்ஸ் கடை திறக்கப்பட்டது. பத்து தளங்கள் கொண்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக வணிகவளாகம் திறக்கப்பட்டது. பார்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தில் தங்க நகை முதல் மளிகை பொருட்கள் வரை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு முதல் வாரம் முழுவதும் ஒரு பவுன் தங்க நகைக்கு 2000 ரூபாய் சலுகைகள் வழங்கி விளம்பரம் செய்திருந்தனர். இதனையடுத்து பெண்கள் கூட்டம் நகைக்கடையில் அலை மோதியது. இதனை பயன்படுத்திக் கொண்ட இரண்டு பெண்களும் நகைக்கடைகளில் உள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் போல் பார்க்க வந்து ஐந்து பவுன் தங்க நகையை திருடினர். கடை திறந்த முதல் வாரத்திலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் மதுரை மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகார் அளித்து ஒப்படைத்தனர்.

இதனிடையே மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் கட்டுமான பணிகள் முழுமையடையாத பட்சத்தில் புதிதாக கடை திறக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அதே சமயம் அருகிலேயே தனியார் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளதாகவும், அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இருந்த போதிலும் கட்டுமான பணிகள் பணிகள் எதுவும் முழுமை பெறாத நிலையில் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.
வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததால் அதிகப்படியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவது மட்டுமில்லாமல் அருகில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் செல்லும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரையில் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
அதோடு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரையில் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை அல்லது சில தலங்களை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு அந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத் துறையினர் அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மதுரை மாநகராட்சி தரப்பில், "மாட்டுத்தாவணி சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டிட அனுமதி நகர திட்டமிடல் துறையின் இயக்குனராலேயே வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி, "சரவணா ஸ்டோர்ஸின் கட்டிடப்பணி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நகர திட்டமிடல் துறை இயக்குனர் மற்றும் தீயணைப்பு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
சரவணா ஸ்டோர் கடை திறக்கப்பட்டு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்த வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவிய நிலையில் பொதுமக்கள் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே வருவதற்கும் ஊழியர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 2க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 108 அம்புலன்ஸ் சேவையும் வரவழைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்துள்ளதால் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வெளியே வந்த பொதுமக்கள் சிலர் நிர்வாகத்தினருக்கு எதிராக கூச்சலிட்டனர். தொடர்ந்து தீ பற்றி எரிந்ததால் மாட்டுத்தாவணி சாலை முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்தது. தீ தொடர்ந்து எரிந்ததை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகரும் உதவி மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிரம்மாண்டமாக கடை திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் திருட்டு சம்பவம், நீதிமன்றத்தில் வழக்கு, தீ விபத்து என பல சிக்கல்களை சந்தித்து உள்ளதால் கட்டிடத்தில் வாஸ்து கோளாறு எதுவும் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications