கண்ட இடங்களில் தொட்டு.. ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்! பதறிப் போய் புகாரளித்த மாணவிகள்! மிரண்ட மதுரை!
மதுரை: மதுரையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக ஆண் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான மாணவிகள் புகார் அளித்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வகுப்புகளின் போது ஆபாசமாக பேசுவதாகவும், மாணவிகளிடம் தவறான வீடியோக்களை காண்பித்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் கீழ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை நகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாணவிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும், ஆண் ஆசிரியருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் துணை தலைமை ஆசிரியரும் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ளாக பிரச்சனையை உருவாக்கி இரு தரப்பாக மாற்றி விடுகிறார் எனவும் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகை தருகிறார்கள், அதனை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும், மாணவர்களுடைய பெற்றோர்களும் மாணவிகளை ஆபாசமாக தவறாக பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடப்பதாகவும் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பதாகவும் அதற்கு உதவியாக இருப்பதாகவும் கூறி புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூன்று பேர் மீது திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications