Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்திரை திருவிழாவுக்கு மதுரைக்கு வறீங்களா?..சுக்குகாபி..ஜிகர்தண்டா..நுங்கு சர்பத்..டேஸ்ட் பாருங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவை காண மதுரைக்கு வரும் மக்களே..மணக்க மணக்க மல்லிகை வாசம் வரவேற்கும். எங்கு பார்த்தாலும் சுவையான உணவுகளும் உங்களை வரவேற்கும். வெயிலுக்கு இதமாக ஜில் ஜில் ஜிகர்தண்டா, நுங்கு சர்பத் ஒருபக்கம் ருசிக்க வறட்டு இருமலை போக்க சுக்குமல்லி காபியும் பருத்தி பாலும் வா என்று அழைக்கும். மதுரையில் என்னென்ன உணவுகளை ருசித்து சாப்பிடலாம் என பார்க்கலாம்.

புதிதாக ஒரு ஊருக்கு போனால் அந்த ஊரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவோம். மதுரையில் ஸ்பெஷலான பல உணவுகள் உள்ளன, டீ கடையில் தொடங்கி மிகப்பெரிய ஃபேமஸ் ஹோட்டல்கள் வரை விதம் விதமான நாவிற்கு ருசியான உணவுகளை சாப்பிடலாம். சைவம் மட்டுமல்ல அசைவ உணவுகளும் அசரடிக்கும்.

Madurai Street foods: Visit Madurai for Chithirai festival must taste these foods

இனிப்பு அப்பம்: தூங்க நகரமான மதுரையில் பெரும்பாலான டீ கடைகள் அதிகாலை 4 மணிக்கே திறக்க ஆரம்பித்து விடுவார்கள். இனிப்போடு ஆரம்பிப்பார்கள். சூஜி அப்பம் சூடாக ரெடியாக இருக்கும். மைதா, ரவை, தேங்காய், எண்ணெய் ஆகியவற்றிலிருந்து சூஜி அப்பம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கையில் டீ மறு கையில் இனிப்பு அப்பம் என சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பிப்பார்கள்.

சுக்குமல்லி: சைக்கிள்களில் சின்ன கேன்களில் வைத்து சுக்குமல்லி காபியை விற்பனை செய்வார்கள். சளி, செரிமான பிரச்சனைகள், தொண்டை தொற்று போன்றவற்றை குணப்படுத்த சிறந்த வீட்டு மருந்தாக பயன்படுகிறது. கொத்தமல்லி விதைகள், சீரக விதைகள், கருப்பு மிளகு, சுக்கு மற்றும் பனை வெல்லம் அல்லது வெல்லம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த சுக்கு காபியை மறக்காமல் சுவைத்துப் பாருங்கள்.

Madurai Street foods: Visit Madurai for Chithirai festival must taste these foods

பருத்திப்பால்: தள்ளுவண்டி கடைகளில் வெண்கல பானைகளில் வைத்து கொதிக்க கொதிக்க விற்பனை செய்வார்கள். இதன் சுவையே அலாதியானது. ஆரோக்கியமான இந்த பானம் சளி தொந்தரவுகளை நீக்கும்.
பருத்தி விதைகள் மற்றும் தேங்காய் பால் சாறு வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் இந்த பருத்தி பால் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

பருத்திப்பால்

இளநீர் சர்பத், நுங்கு சர்பத்: மதுரையில் சர்பத் பேமஸ், நன்னாரி, வெட்டிவேர் சர்பத் வரிசையில் இளநீர் சர்பத், நுங்கு சர்பத் என புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சற்றே புறநகர் பகுதிகளில் பயணம் செய்ய நேர்ந்தால் நுங்கு கலந்த பதநீர் ருசியாக சாப்பிடலாம். குளிர்ச்சியை அனுபவிக்க மறக்காதீர்கள்.

ஜிகர்தண்டா: மதுரை என்றாலே பலரின் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டா. மருத்துவ குணம் கொண்ட ஜிகர்தண்டா,
மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது மற்றும் எடை அதிகரிக்க உதவுகிறது. கோடை வெயிலுக்கு ஜில்லென்று சுவைக்க மறக்காதீர்கள். மதுரையில் பல ஜிகர்தண்டா கடைகள் உள்ளன.

மல்லிகைப்பூ இட்லி: எத்தனையோ ஊர்களில் இட்லியை ருசித்தாலும் மதுரை இட்லியின் சுவை தனித்துவம் மிக்கது. 2 இட்லிக்கு 4 வகை சட்னியை ருசிக்கலாம். பஞ்சு போன்ற இட்லி பல கடைகளில் கிடைக்கும். சுவையோடு ஆரோக்கியத்தையும் சேர்த்து சாப்பிடலாம். அசைவ கடைகளில் இட்லிக்கு எலும்பு சால்னா, மட்டன் சால்னாவை கொடுப்பார்கள்.

பன் புரோட்டா: இன்றைக்கு பல ஊர்களில் பரோட்டா விற்பனை செய்யப்பட்டாலும் பன் பரோட்டாவின் சுவை அலாதியானது. மட்டன் சால்னா, சிக்கன் சால்னா, சேர்த்து கொடுக்கப்படும் பன் பரோட்டாவை மாலை நேரங்களில் ருசிக்க மறக்காதீர்கள். லேயர் லேயராக வாயில் சுவை அள்ளும். அதே போல கொத்து பரோட்டா, முட்டை பரோட்டாவும் உங்களின் நாவின் ருசி அரும்புகளை சுண்டி இழுக்கும்.

கறி தோசை: மதுரையில் உள்ள அசைவ ஹோட்டல்களில் சிறப்பான உணவு கறி தோசை, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை என ரகம் ரகமாக சாப்பிடலாம். மினி ஆனியன் ஊத்தப்பம் போலவே இருக்கும் அதோடு முட்டை, மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து சமைக்கப்படும் கறி தோசை உங்கள் நாவில் தாண்டவமாடும்.

கோலா உருண்டை: எலும்போடு கறியாக கடித்து சாப்பிட விரும்பாதவர்களுக்காகவே இந்த கோலா உருண்டை. மட்டன் அல்லது சிக்கனை நன்றாக அரைத்து சின்ன வெங்காயம், சோம்பு, தேங்காய் பொட்டு கடலை, மசாலா புதினா, கொத்தமல்லி சேர்த்து செய்யப்படும் இந்த கோலா உருண்டையின் ருசி மதுரைக்கே உரித்தானது. மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும்.

அயிரை மீன் குழம்பு: மீன் குழம்பு பலரும் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அயிரை மீன் குழம்பு, கெழுத்தி மீன் குழம்பு சாப்பிட நினைப்பவர்கள் மதுரையில் உள்ள அசைவ ஹோட்டல்களுக்கு வந்துதான் ஆக வேண்டும். சூடான சோற்றில் அயிரை மீன் குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும்.

வாழியல்: முட்டை, வெங்காயம், மிளகுத்தூள் மற்றும் மட்டன் குழம்பு ஆகியவற்றால் 3 வகைகளில் செய்யப்படும் ஒரு முட்டை உணவு வாழியல். ஒரு சிலர் கலக்கி என்று சொல்வார்கள். காரமான முட்டை ரெசிபியை நீங்கள் மதுரை தல்லாகுளம் பகுதியில் ருசிக்கலாம்.

வடை, பட்டர் பன்: மதுரையில் பஜ்ஜி, போண்டா ருசியாக கிடைக்கும். முருங்கைக் கீரை வடை சாலையோர கடைகளில் கிடைக்கும். பட்டன் பன் ருசியானது. மாலை நேரங்களில் இந்த இனிப்பு பட்டர் பன்னை சாப்பிட மறக்காதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+