மதுரையில் அளவெடுக்க வந்த டெயிலர்.. நறுக்னு கேட்ட மாணவி! கட்டாயப்படுத்திய ஸ்கூல்? பரபர சுப்ரமணியபுரம்
மதுரை: பள்ளி மாணவியிடம் யூனிபார்ம் அளவெடுக்கும்போது, டெயிலர் ஒருவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவி மதுரை நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் கீழ் ஆசிரியை மற்றும் இரண்டு டெய்லர்கள், மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். என்ன நடந்தது மதுரை சுப்பிரமணியபுரத்தில்?
மதுரையில் மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் ஆண் மற்றும் பெண் டெய்லர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்..

அளவெடுக்க வந்த பெண், ஆண் டெயிலர்கள்
இதையடுத்து, டைலர்கள் 2 பேரும், சீருடைகளை தைப்பதற்காக மாணவிகளிடம் அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10ம் வகுப்பு படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், "மாணவிகளுக்கு அளவெடுப்பதற்கு, எதுக்காக ஆண் டெய்லரை அழைத்து வந்தீர்கள்? பெண் டெய்லர் மூலம் அளவெடுக்கலாமே? மாணவிகளுக்கு பெண்கள் மட்டுமே அளவெடுக்க வேண்டும்.. எனக்கு ஆண் டெயிலர் அளவெடுக்கக்கூடாது.. அப்போது தான் அடுத்தாண்டு இந்த பள்ளியில் படிக்க போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆண் டைலர் வேணாம்
ஆனால், அங்கிருந்த ஆசிரியை ஒருவர், ஆண் டைலரிடம்தான் அளவெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக வற்புறுத்தியதாக தெரிகிறது... இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் சொன்னதற்கு, ஜஸ்ட் Freeயா எடுத்துக்கோ என்று மாணவியிடம் சொல்லப்பட்டதாம். இறுதியில், ஆண் டெய்லர்தான், அந்த மாணவிக்கு அளவெடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும்போது தன்னுடைய உடல் பாகங்களை தொட்டார் என்றும், அவர் மீதும், என்னை கட்டாயப்படுத்திய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 10ம் வகுப்பு மாணவி மதுரை நகர் மகளிர் போலீசில் புகார் தந்தார்..
டெயிலர்கள் மீது பாய்ந்த போக்சோ
மாணவியின் இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியை, அளவெடுத்த டெய்லர் மீதும், கட்டாயப்படுத்திய ஆசிரியை, உடந்தையாக இருந்த பெண் டெய்லர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள பள்ளி வாயிலை இந்திய மாணவர் சங்கத்தினரும், மகளிர் அமைப்பினரும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.. அப்போது பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இதில், மாணவர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதையடுத்து, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதனால், மதுரை சுப்பிரமணியபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications