நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! சற்றுமுன் வெளியான தகவல்! குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி!
மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மதுரையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான பார்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளையும் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது.

அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேடு பகுதியிலும்,பதினாறாம் தேதி அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
மதுரை ஜல்லிக்கட்டு:
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். பொங்கல் பண்டிகை தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மட்டும் 5786 ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1298 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
டாஸ்மாக் விடுமுறை:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாக ஐயாயிரத்திற்கு மேற்பட்டோரும் தொலைக்காட்சிகளில் லட்சக்கணக்கானோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மதுரையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான பார்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு:
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதுக்கடைகள் மூடல்:
அரசு மதுபானக்கடை எண் - 5416 க.எண்.3/321, பிளாட் எண்.29, எம்.பி.மகால், கோவில் பாப்பாகுடி ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை , 5459 க.எண்.4/278, பாலமேடு மெயின் ரோடு, பொதும்பு, சிக்கந்தர் சாவடி, மதுரை. , ரெட் மௌண்ட் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம் 3/377, அலங்காநல்லூர் மெயின் ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை., பிரின்ஸ் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம், எண். 53/1, விசுவாசகர் நகர், பாசிங்கா புரம், பொதும்பு, மதுரை ஆகிய கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications