இறந்தும் உயிர் வாழும் இதயம்.! 'கடவுளாக மாறிய செல்வம்.. மதுரை டூ கோவை திக் திக் பயணம்
விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர்.
மதுரை: விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை மற்றும் புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.
விருதுநகரைச் சோ்ந்தவா் செல்வம் வயது 33. இவா், விருதுநகரில் அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் சம்மதித்தனர்.
இதையடுத்து அவரது இதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும்
தானமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

திக் திக் பயணம்
இதைத்தொடர்ந்து அவரது இதயம், வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வியாழக்கிழமை புறப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், உதவி ஆணையர் செல்வின் உட்பட 200 போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

ஆம்புலன்ஸ்கள்
மதுரையில் இருந்து சிந்தாமணி, சின்ன உடைப்பு, கப்பலூர், திண்டுக்கல் வழியாக கோவை தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அதேபோல், கல்லீரல் புதுக் கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் பாதுகாப்பு பணி காரணமாக சாலை சந்திப்புகளில் எந்த தடையுமின்றி ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்றன.

புதுக்கோட்டை கல்லீரல்
மூளைச்சாவு அடைந்த செல்வத்தின் இதயம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது. இதேபோல் செல்வத்தின் கல்லீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு பொறுத்தப்பட்டது. இதன் மூலம் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர்.

பால் விற்பனை
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரால் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ரோஸ் மகன் ஜேப்பி 42. இவர் அப்பகுதியில் பால் விற்பனை தொழில் செய்து வருகிறார்.

உறுப்புகள் தானம்
கடந்த 8ம் தேதி வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தவரை மீட்ட உறவினர்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த திங்கள்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ஜேப்பியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினார்கள் இதையடுத்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம் தானமாக கொடுத்தனர். கல்லீரல், வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications