மதுரையில் ஷாக்! பெற்ற குழந்தைனு கூட பார்க்கல.. பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற தாய்! பகீர் காரணம்
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வெறும் சில மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையைப் பெற்ற தாயே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நமது நாட்டில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது என்பது கிட்டதட்ட கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ரூல்ஸ் போல ஆகிவிட்டது. திருமணமான உடனேயே இது குறித்து பலரும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.
உடல்நிலை பிரச்சினை என எந்த பாதிப்பு இருந்தாலும் அதையெல்லாம் அவர்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படித் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருப்பது பலருக்கும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தை இல்லை: இந்த இந்திய மனநிலையை வைத்தே இங்கே ஏகப்பட்ட கருத்தரிப்பு மையங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. முன்பு, பெருநகரங்களில் மட்டும் அதுவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கருத்தரிப்பு மையங்கள் இப்போது எல்லா பக்கமும் வந்துவிட்டதே இதற்குச் சாட்சி. இப்படிப் பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்தாலும், சில நேரங்களில் தவிர்க்கவே முடியாத சிக்கல்கள் ஏற்பட்டு விடுகிறது.
அதன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதே மிகப் பெரிய அழுத்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தான் பகீர் சம்பவம் நடந்துள்ளது. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ்... அவரது மனைவி ஜீவிதா. இந்த தம்பதிக்குத் திருமணமாகி 8 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
கொலை: இதனால் கடும் மன அழுத்தத்தில் இவர்கள் இருந்துள்ளனர். இதற்கிடையே ஜீவிதா, கடந்த ஆண்டு கருவுற்றுள்ளார். அவருக்கு அங்குள்ள அரசு மருத்துவமனை கடந்தாண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், குழந்தை பிறந்தது முதலே அதற்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை ஓயாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. மேலும், குழந்தைக்குச் சரும நோயும் ஏற்பட்டுள்ளது.
குழந்தை பெரும்பாலான நேரங்கள் அழுது கொண்டே இருக்குமாம். இதனால் விரக்தியடைந்த ஜீவிதா பெற்ற குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அவர் குழந்தையின் கழுத்தை பிளேடை வைத்து அறுத்துக் கொன்றுள்ளார். இருப்பினும், குழந்தையின் தொட்டில் குழந்தையின் கழுத்தை இறுக்கியதாகவும் இதன் காரணமாகவே ரத்தம் வந்து குழந்தை உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
மன அழுத்தம்: இருப்பினும், குழந்தையின் கழுத்தில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த சிலர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்திய போது இந்தச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. போலீசார் நடத்தி விசாரணையில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும் நீண்ட காலம் கழித்துப் பிறந்த குழந்தைக்கும் அடிக்கடி பாதிப்பு இருந்ததாலும் மன அழுத்தம் காரணமாக இந்த கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறந்து சில மாதங்கள் மட்டுமே ஆன குழந்தையை பிளேடால் அறுத்து கொலை செய்த தாயாரைக் கைது செய்தனர். அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications