கர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்!
மதுரை: கர்ப்ப பையில் நீர் கட்டிஇருந்ததால் கரைப்பதற்கு ஜிம்முக்கு போன கனிமொழி என்ற பெண்ணுக்கு, ஜிம் மாஸ்டருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவருடன் மாயமானார். இதனால் கனிமொழியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 26). ராஜேஷ் கனிமொழி என்பவரை மூன்று வருடங்களுக்கு காதலித்து திருமணம் செய்தார்.
ராஜேஷ் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

கர்ப்பபையில் கட்டி
ராஜேஷ் -கனிமொழி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்குக் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் கனிமொழி, கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டி கரைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றார்.

காதலை கைவிட மறுப்பு
மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் ஜிம்மில் சேர்ந்து கனிமொழி உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். அங்கு யோகேஷ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன் ராஜேஸிற்கு தெரியவர, அவர் இதெல்லாம் சரிவராது யோகேஷ் கண்ணாவுடனான பழக்கத்தைக் கைவிடுமாறு கண்டித்திருக்கிறார்.

செல்போனில் பேச்சு
இந்நிலையில் கனிமொழி யோகேஷ் கண்ணாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசியதை, கணவன் ராஜேஷ் கண்டித்தார். இதனால் வீட்டை விட்டு வெளியேற முயன்ற கனிமொழி முயன்றிருக்கிறார் இதையும் ராஜேஷ் தடுத்துள்ளார். இதுகுறித்து தெரியவர ஜிம் மாஸ்டர் யோகேஷ் கண்ணா தனது நண்பர்களுடன் வந்து, ராஜேஷின் வீடுபுகுந்து மிரட்டிவிட்டு கனிமொழியை தூக்கிச் சென்றாராம்.

மனைவியை மீட்டு தாருங்கள்
இதனால் உடைந்து போன ராஜேஷ், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "யோகேஷ் கண்ணா தன்னை தொடர்புகொண்டு, என் மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் மிரட்டுகிறார். என் மனைவியை மீட்டுத்தாருங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி வினோதினி, ராஜேஷ், அவரது மனைவி கனிமொழி, மற்றும் உடற்பயிற்சி கூட உரிமையாளர் யோகேஷ் கண்ணன் ஆகியோரை அழைத்து விசாரித்தார். கர்ப்பபை கட்டியை கரைக்கச் சென்ற பெண்ணை, ஜிம் மாஸ்டர் கவர்ந்து சென்றது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications