ஆட்சியில் பங்கு! மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
மதுரை: ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆட்சியில் பங்கு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருந்தார். இருப்பினும், தொடர்ந்து காங்கிரஸ் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. தற்போது, ஆட்சியில் பங்கு கோரி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தில், "ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதையும் அன்பையும்தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியை கொடுக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதலமைச்சரை சகோதரர் என்று அழைக்கிறார். அதேபோல எங்களுக்கும் மரியாதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அமைச்சர்கள் காங்கிரஸை வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று கூறுகிறார்கள். கூட்டணி குறித்து அசால்ட்டாக பேசுகிறார்கள். இதெல்லாம் வலியை கொடுக்கிறது.
நாங்கள் உங்களோடு இருந்து நீங்கள் செய்த தவறுகளுக்காக பழைய சுமந்தவர்கள். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். திமுக மாவட்ட செயலாளர் தளபதி பேச்சு வருத்தமளிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20 நாட்கள் ஆகிவிட்டது. தற்பொழுதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மற்ற மாவட்ட செயலாளர்களும் பேசுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது. எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.
பூத் கமிட்டியில் ஆள் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். நாங்கள் இதற்கான பட்டியலை ரெடி செய்திருக்கிறோம். பூத் கமிட்டி ஆட்களுக்கான கூட்டத்தை போட்டு நாங்கள் பலத்தை நிரூபிப்போம்" என்று பேசியிருக்கிறார்.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications