புலி பாயுமாம்.. எதிர்கால திட்டம் நாளை மதுரையில் அறிவிப்பாம்- வைகோ பேச்சு- மதிமுகவில் பரபரப்பு!
மதுரை: தமது எதிர்கால திட்டம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டில் தாம் அறிவிக்க இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் வாரிசு அரசியல் திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கலகக் குரல் எழுப்பியவர் வைகோ. இதனாலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதிமுக என தனிக்கட்சி தொடங்கினார். காலச் சக்கரத்தில் வைகோ தனிக்கட்சியை தொடர்ந்து நடத்தினாலும் எந்த திமுகவை எதிர்த்தாரோ அதே திமுகவுடன் கூட்டணி வைத்தார்; முதல்வர் ஸ்டாலினை வாரிசு அரசியல் என விமர்சித்த வைகோ அவர் மூலமே ராஜ்யசபா எம்பி பதவி பெற்று மீண்டும் டெல்லி அரசியலில் கால் பதித்திருக்கிறார்.

அத்துடன் இல்லாமல், தமது அரசியல் வாரிசாக மகன் துரை வையாபுரி என்ற துரைவைகோவை கட்சிக்குள் கொண்டு வந்தார். தற்போது மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவி வகித்து வருகிறார் துரை வைகோ. வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ வாரிசு அரசியலை கட்சிக்குள் நடைமுறைப்படுத்தியதால் மதிமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஒதுங்கிக் கொண்டனர். பலர் கட்சியைவிட்டே வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் மதுரையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துகிறது மதிமுக. இந்த மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நாட்டில் கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. பிரதமர் மோடி இன்னொரு ஹிட்லராக, முசோலினியாக மாறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. "இந்தியா" கூட்டணி தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தரும் மரியாதையைப் பார்த்து மகிழ்ந்து போனேன். மத்தியில் நடக்கும் சர்வாதிகார சர்க்காரை வீழ்த்தி "இந்தியா" கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
நான் விமானத்தில் வரும்போது, சிங்கத்தின் கர்ஜனையை கொஞ்ச நாளாக காண முடியவில்லை என கூறினார். புலி பாய வேண்டிய நேரத்தில் பாயும். மதுரை மாநாட்டில் நாளை என் எதிர்கால திட்டத்தை அறிவிப்பேன். இவ்வாறு வைகோ கூறினார். வைகோ அறிவிக்கும் எதிர்கால திட்டம் எது என்பது தொடர்பாக மதிமுகவில் பல்வேறு கருத்துகளுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications