மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லையா? உடனே தூக்கிடுங்க! முதல்வன் பட பாணியில் மாஸ் காட்டிய அமைச்சர் மா.சு!

Google Oneindia Tamil News

மதுரை : மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் திடீரென வாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இல்லாத மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார்.

தமிழகம் வந்த வெளிநாட்டு விமான பயணிகளிடம் கொரோனா கண்டறியப்படவில்லை! இருந்தாலும்..அமைச்சர் எச்சரிக்கை தமிழகம் வந்த வெளிநாட்டு விமான பயணிகளிடம் கொரோனா கண்டறியப்படவில்லை! இருந்தாலும்..அமைச்சர் எச்சரிக்கை

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் இடத்தினை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

திடீர் ஆய்வு

திடீர் ஆய்வு

சுகாதாரத்துறையினரிடம் கொரோனா மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவு பரவி வரும் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்தும்., மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார்.

பணியில் இல்லாத மருத்துவர்

பணியில் இல்லாத மருத்துவர்

இதனையடுத்து மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை சென்றிருக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதுரை வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று காலை ஆய்வு நடத்த சென்ற போது, அங்கே ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர்.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

ஆனால், ஆரம்ப சுகாதார மையத்தில் பணி நேரத்தில மருத்துவர் பூபேஸ்குமார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாததால் அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்தார். வழக்கமாகவே, மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாகத்தான் வருவதாகக் கூறி அங்கிருந்தவர்கள் அமைச்சரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து. பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் பூபேஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு. மதுரை மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

English summary
On the way from Madurai to Dindigul, Medical Minister Ma Subramanian inspected the Vadipatti Government Primary Health Center and ordered immediate action against the doctor who was not on duty there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X