லாங் லீவ் முடியலை போல... இன்றும் மதுரை திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்காத அமைச்சர் பிடிஆர்!
மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் இன்று திமுக இளைஞரணி- மருத்துவர் அணி- மாணவர் அணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது சலசலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் தரக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20-ந் தேதி திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால் அன்றைய தினம் மதுரையில் மட்டும் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து இன்று மதுரையில் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அமைச்சரும் மாவட்ட செயலாளர்களில் ஒருவருமான மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். ஆனால் மதுரையை சேர்ந்த மற்றொரு அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக நாம் திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, அமைச்சர் பிடிஆர் கடந்த 16-ந் தேதி தமது ட்விட்டர் பக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக மலேசியா செல்வதாகவும் இதற்காக தமக்கு விடுப்பு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனவும் பதிவிட்டிருந்தார். அதே கால கட்டத்தில் மதுரையில் டி.எம். சவுந்தரராஜன் சிலை, ராமநாதபுரத்தில் திமுக வாக்கு சாவடி முகவர் மாநாடு, ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாடு என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை அனைத்துமே முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள். இதில் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை. தற்போது திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற நிலையில் இன்றும் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை. ஒருவேளை முதல்வரிடம் கேட்டிருந்த லீவ் காலம் இன்னமும் முடியவில்லையோ என்னவோ என்றனர்.
அதேநேரத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஐ.டி. முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பு, காலை உணவு, புத்தக அன்பளிப்பு தொடர்பான படங்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications