பிடிஆரின் தாய் கொடுத்த பரிசு! சிலையை வாங்கியதும் பிரதமர் மோடி தந்த ரியாக்சன்! மதுரையில் சுவாரசியம்
மதுரை: 2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார். முன்னதாக அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி பிரதமர் மோடியை சந்தித்து நினைவுப்பரிசு வழங்கியதும், அதனை பெற்றதும் பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து மாநிலங்களிலும் பாஜக தொடங்கிவிட்டது. கடந்த முறை பாஜக 303 தொகுதிகளில் வென்ற நிலையில் வரும் தேர்தலில் 370 தொகுதிகள் வெல்லும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவுக்கு வடமாநிலங்களை போல் செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்கும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் அனைத்து இடங்களுக்கும் அண்ணாமலை யாத்திரையாக சென்றார். இதையடுத்து ‛என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்தார். மாதப்பூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு நேற்று தூத்துக்குடி மாவட்டம் குலசையில் ஏராளமான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். குலசையில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அவர் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் மாதப்பூர் பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி மதுரைக்கு சென்றார். அங்கு சிறு , குறு நடுத்தர டிஜிட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார்.
இந்த வேளையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த வேளையில் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பிரதமர் மோடியை வரவேற்று நினைவுப்பரிசு வழங்கினார். பிரதமர் மோடிக்கு மதுரை மீனாட்சியம்மன் சிலையை அவர் வழங்கியதோடு அதுபற்றி விளக்கம் அளித்தார்.
மீனாட்சி சிலையை கையில் வாங்கிய பிரதமர் மோடி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தயார் ருக்மணியின் வரவேற்பு மற்றும் அவர் தந்த விளக்கத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications