உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி? 15 நாட்களுக்கு பிறகு சொன்ன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது ஏன் என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அவரை ஏன் அமைச்சராக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். இவருக்கு அமைச்சர் பதவி இப்போது கிடைக்கும் அப்போது கிடைக்கும் என தகவல்கள் வந்தன. இன்னும் சிலர் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

திண்டுக்கல்
அதன்பிறகு கோவை, திண்டுக்கல், திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், மக்கள் மத்தியில் கவரும் வகையில் பேசி வருகிறார். கருணாநிதியின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும் உங்கள்வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதுதான் எனக்குப் பெருமை.

செல்லப் பிள்ளை
பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகிறார்கள். திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வருக்கு நிகராக செயல்படுகிறார் என திருச்சியில் தெரிவித்திருந்தார். அது போல் அமைச்சர் நேரு வேறொரு கூட்டத்தில் பேசிய போது உதயநிதி மட்டுமில்லை அவரது மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் அவருக்கும் வாழ்க என கோஷம் போடுவோம் என தெரிவித்திருந்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
அது போல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் அமைச்சராக உதயநிதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டார். வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலினின் எண்ணங்களையும் நம்பிக்கையையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றார். இப்படி ஆளாளுக்கு உதயநிதியை புகழ்ந்து வரும் நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் அன்பழகன்
மதுரையில் நேற்று நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் மக்களின் சராசரி வயது 35 அல்லது 36 ஆக உள்ளது. திமுக உறுப்பினர்களின் வயது இதைவிட இடைவெளியைக் குறைப்பதாகவும் இளைஞர்களை ஈர்க்கவும் இளைஞரணி செயலாளர், அமைச்சர் பொறுப்புக்கு வந்தது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது.

பதவி உயர்வு
அதற்காக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கட்சியின் அசையும் சொத்து அவர். என்னோடு பாசத்துடன் பரஸ்பர உரிமையோடு நெருங்கிப் பழகுபவர். உதயநிதி பணியில் தேவையான முன்னேற்றங்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை அண்ணன் என்ற முறையில் நான் செய்து தருவேன். எனக்கு எத்தனையோ பதவி வந்தாலும் பண்பாளரின் மகன் என்பதுதான் எனது முக்கிய அடையாளம். அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த உதவியும் கொடுக்கவும் முடியாது. எடுக்கவும் முடியாது. எல்லா மதத்தின் நல்ல கருத்தையும் பின்பற்றுபவன் நான் என கூறியிருந்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்












Click it and Unblock the Notifications