தூற்றுவோர் தூற்றட்டும்.. எடப்பாடி பற்றி கவலையில்லை.. பகவத் கீதையை மேற்கோள் காட்டிய ராஜகண்ணப்பன்!
மதுரை: எதிர்க்கட்சியை பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு, போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்று பகவத் கீதை வாசகத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்பது வேண்டுகோளுக்கேற்ப கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தரப்பில் ரூ.1,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் வேட்டி மற்றும் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அதிமுகவினர், நாங்கள் அறிவுறுத்திய பின்னரே தமிழக அரசு வழங்கியதாக பேசி வருகின்றனர்.

பகவத் கீதை வாசகம்
இந்த நிலையில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அதிமுக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். இன்னைக்கு இருக்க நிதி ஆதாரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.

எடப்பாடி பற்றி கவலையில்லை
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அது போராட்டத்திற்காக அல்ல மக்களின் வேண்டுகோளுக்கேற்ப கொடுக்கிறோம். எங்களுக்கு எதிர்கட்சியைப் பற்றியோ, எடப்பாடி பழனிசாமியைப் பற்றியோ கவலை இல்லை என்று தெரிவித்தார்.

பிரச்சினைகள் இல்லை
தொடர்ந்து பொங்கல் தொகுப்பு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பொங்கல் தொகுப்பு 2 கோடியே 19 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சொல்லியுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் இந்த ஆண்டு ரொக்கம் ஆயிரம், சர்க்கரை, முழு கரும்பு கொடுத்து, கரும்புக்கு விலையும் நிர்ணயித்து முறைப்படி நடக்கிறது என்று தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம்
இதன்பின்னர் தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, அமைச்சர்கள் இலாக்க மாற்றம் என்பது முதலமைச்சரின் விருப்பம் என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications