மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் பணத்தை என்ன கொட்டியா வைச்சிருக்கோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்கிறார்

Google Oneindia Tamil News

மதுரை: அதிமுகவில் பணத்தை என்ன கொட்டியா வைச்சிருக்கோம் என எதிர்க்கட்சிகளை பார்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள அதே நேரம், தேனி, தூத்துக்குடி தொகுதிகள் உட்பட பல பகுதிகளில் ஜரூராக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தேனி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், வேலூரைப் போன்று, தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

ஒரு விரலை அழுத்தி ஓட்டுக்கூட போட முடியலேன்னா.. நீதான் முதல் திருடன்.. ஏ.ஆர். முருகதாஸ்ஒரு விரலை அழுத்தி ஓட்டுக்கூட போட முடியலேன்னா.. நீதான் முதல் திருடன்.. ஏ.ஆர். முருகதாஸ்

செல்லூர் ராஜூ கோபம்

செல்லூர் ராஜூ கோபம்

எதிர்க்கட்சிகளை குறி வைத்தே சோதனை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்து, இது போன்று பேசி வருகின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

பணம் கொட்டியா கிடக்கு

பணம் கொட்டியா கிடக்கு

மேலும், அதிமுக அரசு மக்கள் நலனுக்காக ஏராளாமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வளவு திட்டங்களை கொடுத்தும், பணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்கு, அதிமுகவில் என்ன பணத்தை கொட்டியா வைத்துள்ளோம் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவே, சும்மா ஏதாவது எதிர்க்கட்சிகள் சொல்லி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி

எப்படியும் தோற்க போகிறோம், அப்படி தோற்று விட்டால் பணத்தை கொடுத்து ஜெயித்து விட்டார்கள் என்று சொல்லி கொள்ளலாம் என்றும் மாற்றி பேசி விடலாம் எனவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர் அவர்களது கனவு பலிக்காது. மேலும், பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்று கூறுவது எல்லாம் எதிர்க்கட்சிகள் செய்கிற சூழ்ச்சி தான் என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

வேண்டுமென்றே குற்றச்சாட்டு

வேண்டுமென்றே குற்றச்சாட்டு

எங்கள் அணி மீது குற்றச்சாட்டு கூறுவதை கேட்கும் போது சிரிக்க தான் தோன்றுகிறது. மக்களை நம்பித்தான் நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி எல்லாம் இல்லை என்றும் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி வருவதாக கடுகடுத்தார்.

English summary
Lok sabha elections 2019: Crores Of money have in AIADMK; Minister Sellur Raju asks the opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X