ஜன. 3-ல் மு.க.அழகிரி ஆலோசனை.. கலைஞர் திமுக பெயரில் மதுரையில் பரபர போஸ்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நாளை மறுநாள் மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனை ஒட்டி கலைஞர் திமுகவின் அஞ்சா நெஞ்சன் பாசறை என்ற பல அடி நீள போஸ்டர்கள் ஒட்டி அசத்தி வருகின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் மு.க. அழகிரி கூட்டணி அமைப்பார். இதற்காக கலைஞர் திமுக என்ற பெயரில் அழகிரி தனிக் கட்சி தொடங்க உள்ளார். இந்த கட்சிக்கான கொடியும் வடிவமைக்கப்பட்டுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

MK Azhagiri supporters Kalaignar Dmk Posters in Madurai

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கே வரவில்லை என அதிரடியாக அறிவித்துவிட்டார். இதனிடையே ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் நாளை மறுநாள் மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக இப்போதே அழகிரி ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

மதுரையில் மு.க. அழகிரி வீடு உள்ளிட்ட இடங்களில் பல அடி நீள பிரமாண்டமான போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதில் கலைஞர் திமுகவின் அஞ்சா நெஞ்சன் பாசறை என்றெல்லாம் கூட அச்சிட்டு கட்சி பெயரை பிரகடனம் செய்துள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள். மதுரையில் இன்னும் 2 நாட்களுக்கு அழகிரி ஆதரவாளர்கள் என்பதை பிடிக்க முடியாது போல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+