அண்ணனுக்கு என்னாச்சு? நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்!
Recommended Video
மதுரை: திமுகவில் மீண்டும் இணைவோம் என்று நம்பிக்கையோடு இருந்த மு.க. அழகிரியின் கனவு கானல்நீராகவே போய்வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு ஆதரவாளர்களை மிகவும் கவலைப்பட வைத்துள்ளதாம்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கு திரும்புவதற்காக பல முயற்சிகளை மு.க. அழகிரி முன்னெடுத்தார். திமுகவின் அறக்கட்டளைகளில் ஒன்றிலாவது மகனுக்கு பதவி வாங்க வேண்டும் என முனைப்பு காட்டினார்.
இதற்காக கருணாநிதி குடும்பத்தில் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அழகிரியின் வருகையை கருணாநிதி குடும்பத்தில் சிலர் திட்டவட்டமாக விரும்பவில்லை என கூறப்பட்டது.

அசையாத தலைமை
ஆனால் எதுவும் அழகிரிக்கு சாதகமாக இருக்கவில்லை. மாவட்டங்களில் தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். ஆனாலும் திமுக தலைமை அசைந்து கொடுக்கவில்லை.

அழகிரி சோர்வு
ஒருகட்டத்தில் பழைய தென்மண்டல பதவியே கூட போதும் என்கிற நிலைக்கு இறங்கிப் போனார். அந்த முயற்சியும் அழகிரிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் சோர்ந்து போயினர்.

உடல்நிலை பாதிப்பு
இந்நிலையில் அழகிரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதும் அழகிரி சோர்வாகவே இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு காரில் ஏறப் போகும்போது அழகிரி தடுமாறினார். இதை பார்த்த ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதான் காரணமாம்
இது தொடர்பாக மு.க. அழகிரி ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, அண்ணனுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது.. அதனால்தான் சோர்வாகவே இருக்கிறார். அரசியல் ரீதியான அத்தனை திரைமறைவு வேலைகளையும் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் உற்சாகம் குறையாமல்.












Click it and Unblock the Notifications