ஜனவரி 3-ல் மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் ஹோட்டலில் ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை
மதுரை: மதுரையில் ஜனவரி 3-ந் தேதி முக அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் மு.க. அழகிரியும் இணையக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அழகிரி, கலைஞர் திமுக என தனிக்கட்சியை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

இன்னொரு பக்கம், திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க அழகிரியை தொடர்ந்து சமாதானப்படுத்தும் இறுதி கட்ட சமரச முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் மு.க. அழகிரி இன்று சென்னை வந்து கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனவரி 3-ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவை அறிவிக்கிறேன் என்றார். இதனிடையே மதுரையில் மு.க. அழகிரியின் ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் ஹோட்டலில் ஜனவரி 3-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மு.க. அழகிரி. இதற்கான ஏற்பாடுகள், மாவட்டங்களில் இருக்கும் அஞ்சா நெஞ்சன் பேரவை நிர்வாகிகளுக்கான அழைப்புகள், திமுக அதிருப்தியாளர்களை கணக்கெடுத்தல் என பரபரத்துக் கொண்டிருக்கிறது அழகிரி அணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications