தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின்
மதுரை: தேர்தல் முடியும் வரை தான் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி இருப்பார். அதற்கு பிறகு அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு பொயிடும் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசினார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது மாதிரி, பீகாரில் நிதிஷ் குமாருக்கு நடந்தது தான் எடப்பாடிக்கு நடக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போலயும், பீகாரில் நிதிஷ் குமாருக்கு நடந்தது போலயும் இப்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கப் போகுது..

அதிமுக என்ற பெயரையே சொல்லவில்லை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரான நிதிஷ் குமார் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அதிரிச்சி அளித்தது. அதிமுக என்ற பெயரையே இப்போது பாஜக சொல்லவில்லை. அதிமுக பாஜக கூட்டத்தில் கூட மோடி இரட்டை விரலை உயர்த்தி இருந்த படத்தை மாற்றிவிட்டார்கள்.
இதனை முன்கூட்டியே அறிந்து தான் அதிமுகவில் இருந்து தாய் கழகமான திமுகவில் இணைந்து வருகிறார்கள். இன்னும் நிறைய பேர் வருவார்கள். மிக வித்தியாசமான மேடை.. சில காலத்திற்கு முன்பு வரை சகோதரர் ஓபிஎஸ் அவர்கள் இந்த மேடையில் இருப்பார் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.. லேட்டாக வந்தாலும், தாய் கழகமான திமுகவிற்கு தான் வந்திருக்கிறார். அவரையும், அவருடன் வந்தவர்களையும் நான் வரவேற்கிறேன்.
நானும் எம்ஜிஆருக்கு ரசிகன்
எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல.. நானும் எம்ஜிஆருக்கு ரசிகன் தான். கழகம் அவரை வளர்த்தது.. அவரும் கழகத்தை வளர்த்தார். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால், உரிமைக்குரல் எழுப்பில் தாய் கழகத்திற்கு திரும்பி இருக்கிறார். தடம் மாறாமல் திராவிட பாதையில் பயணம் செய்யும் உங்களை வரவேற்கிறேன்.
ஓ பன்னீர் செல்வம் என்றால் விசுவாசம், ஓபிஎஸ் என்று சொன்னால் முதலில் நியாபகத்திற்கு வருவது விசுவாசம் தான்.. இதற்காக ஜெயலலிதா அவர்களாலே பாராட்டு பெற்றவர். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பவர்.. அப்படித்தான் சட்டசபையில் சிரித்ததற்கு பெரிய விவாதமாக்கினார்கள். சிரித்த முகமாக இருப்பவர் ஓ பன்னீர் செல்வம். இது அவரது இயல்பு.. என்னை பார்த்து சிரித்ததற்கு இரு நாட்டுக்கு இடையே போர் வந்த மாதிரி ஆக்கிவிட்டாங்க..
துரோகத்தின் முழு உருவமாக மாறிவிட்டது
முதல்வர் இருக்கையில் இரண்டு முறை ஓ பன்னீர்செல்வத்தை அமர வைத்தவர் ஜெயலலிதா.. ஆனால் கூவத்தூரில் சசிகலா காலில் ஊர்ந்து பதவி வாங்கிவிட்டு, அவரையே ஒருமையில் பேசியவர் தான் பழனிசாமி. தன்னை காப்பாற்றிக்கொள்ள எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவையே அடகுவைத்தவர் தான் எடப்பாடி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக ரத்தத்தை பாஜக உறிஞ்சுகிறது.. இந்த தேர்தல் முடியும் வரை தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி இருப்பார். அதற்கு பிறகு மாத்திவிடுவார்கள். தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை நியமிக்கும். அதிமுக முழுக்க முழுக்க பாஜக கண்ட்ரோலில் போய்விட்டது. அதிமுக துரோகத்தின் முழு உருவமாக மாறிவிட்டது. திமுக அப்படியல்ல.. சுயமரியாதையுடன் கம்பீரமாக இருக்கிறது. எய்ம்ஸ் கட்ட தாமதம் மட்டுமல்ல.. மதுரையில் மெட்ரோ வராமல் தடுக்கிற ஆட்சியாக பாஜக இருக்கிறது.. மதுரை வந்த மோடியால் பாஜக சாதனைகளை சொல்ல முடிந்ததா?” என்று கூறினார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?











Click it and Unblock the Notifications