மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எச் ராஜாவிடம் வெறும் வாழ்த்து மட்டுமே.. கடுகடு முகத்துடன் கண்டுக்காமல் நகர்ந்த மோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வெறும் வாழ்த்து மட்டுமே எச் ராஜாவிடம்... கண்டுக்காமல் நகர்ந்த மோடி!

    மதுரை: பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்துகளை கூறுவதற்காக நின்று கொண்டிருந்த பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜாவிடம் கடுகடு முகத்துடன் வாழ்த்துகளை பெற்று கொண்ட மோடி, அவரை கண்டுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றதால் ராஜா முகத்தில் ஈயாடவில்லை.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தோப்பூரில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.

    அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்று அளித்தனர்.

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    அப்போது அந்த வரிசையில் தமிழிசை சவுந்திரராஜன் இருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றார் மோடி. பின்னர் எச் ராஜா நின்றிருந்தார். அப்போது கைகுலுக்க சென்ற போது மோடி, அவரின் கையில் இருந்த பரிசை பெற்று கொண்டார்.

    கைகுலுக்கி பேச்சு

    கைகுலுக்கி பேச்சு

    அப்படியும் விடாமல் எச் ராஜா கை எடுத்து கும்பிட்ட போதும் கண்டுக் கொள்ளாமல் இல கணேசனை நோக்கி நகர்ந்தார். அவர் கையெடுத்து கும்பிட்ட போது கையை பிடித்து குலுக்கினார். அச்சமயம் எச் ராஜா முகத்தில் ஈயாடவில்லை. மோடி, சிபி ராதாகிருஷ்ணனிடம் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார்.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதை பார்க்கும்போது சமீபகாலமாக பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் எச் ராஜாவின் செயல்பாடுகள் இருந்ததுதான் மோடிக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஹைகோர்ட்டுக்கு எதிராக கருத்து

    ஹைகோர்ட்டுக்கு எதிராக கருத்து

    மெர்சல் படவிவகாரத்தின் போது ஜோசப் விஜய் என கூறி ஜாதி பிரச்சினையை ராஜா இழுத்தார். தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என கூறி திராவிட கட்சிகளின் கோபத்தை கிளறினார். ஹைகோர்ட்டாவது ------------ஆவது என்று கூறியிருந்தார்.

    கண்டு கொள்ளாத மோடி

    கண்டு கொள்ளாத மோடி

    மோடி பெரிதும் மதிக்கும் கருணாநிதியின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் பேசிய ராஜா, முதுகில் அறுவை சிகிச்சை செய்த போது தேசிய கீதம் பாடும்போது கருணாநிதி ஒரு நிகழ்ச்சியில் எழுந்து நிற்காததை விஜயேந்திரர் எழுந்து நிற்காததுடன் ஒப்பிட்டது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கயதுடன் பாஜக மீது தமிழக மக்களுக்கு ஒருவித வெறுப்பை சம்பாதித்து கொடுத்துவிட்டார். இதனால் மோடிக்கு எச் ராஜா மீது அதிருப்தி ஏற்பட்டு அவரை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு காரணமாக இருக்கும்.

    எனினும் மதுரையில் பாஜக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசிய ஆங்கில உரையை மொழி பெயர்த்தவர் எச் ராஜாதான்.

    English summary
    PM Narendra Modi not hand shaking with H.Raja in MAdurai Airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X