க்யூ ஆர் கோடை வைத்து.. தவெக ஆடிய கேம்.. 75 ஆயிரத்தை தாண்டி போய்க்கிட்டு இருக்கே.. விஜய் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடக்க உள்ள நிலையில் இப்போதே 75000 பேர் வரை மாநாட்டு திடலில் திரண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.

Tamilaga Vetri Kazhagam vijay

இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு: எத்தனை பேர் வருகை

மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடக்க உள்ள நிலையில் இப்போதே 75000 பேர் வரை மாநாட்டு திடலில் திரண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. க்யூ ஆர் கோடு மூலம் அங்கே வருகை பதிவேடு உறுதி செய்யப்படும் நிலையில் இதுவரை 75000 பேர் வரை மாநாட்டு திடலில் திரண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நேற்று நள்ளிரவு வந்த வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை கட்ட மறுத்து சேதப்படுத்திய நிலை ஏற்பட்டது.

பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் மாநாட்டிற்கு சென்ற பலர் டோல்கேட்டை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநாடு செல்லும் வழியில் இருக்கும் டோல்கேட்டில் நேற்று இரவு பணம் கட்டாமல் அதை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகளும், "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற பதாகைகளும் அணிவகுத்து நிற்கின்றன.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய், பார்வையாளர்களின் மத்தியில் "ராம்ப் வாக்" செல்லும் வகையில், 10 அடி உயரத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு, இரவு 7 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+