முக்குலத்தோர் முகமாக விரும்பும் நயினார் நாகேந்திரன்.. ஓபிஎஸ், டிடிவி தினகரனை கழற்றிவிட்டதன் பின்னணி!
மதுரை: முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விரும்புவதால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் நயினார் நாகேந்திரனின் மோசமான அணுகுமுறை காரணமாகவே, இருவரும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் தென் மாவட்டங்கள் மிகமுக்கிய பங்கு வகித்து வருகின்றன. தென் மாவட்டங்களில் எந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெல்கிறதோ, அந்தக் கட்சியே ஆட்சி அமைக்கும். ஜெயலலிதா இருந்தவரை தென் மாவட்டங்களில் அதிமுக கொடி நாட்டி வந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் தென் மாவட்டங்களில் அதிமுகவின் பிடி தளர்ந்துள்ளது.

இதனை பயன்படுத்தி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி. ஏனென்றால் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்தை பிடித்தது. இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக கொண்டு வரப்பட்டார். இதன்பின் தென் மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்தும் பணிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக நயினார் நாகேந்திரன் இருக்க வேண்டும்.. அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று டெல்லி மேலிடம் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அளவிற்கு நயினார் நாகேந்திரன் இன்னும் வளரவில்லை. அதுமட்டுமல்லாமல் இருவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்கள். ஓபிஎஸ் மறவர் சமூகத்திற்கும், டிடிவி தினகரன் அகமுடையார் சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதால், நயினார் நாகேந்திரன் வளர்ச்சி அடைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதன் காரணமாக நயினார் நாகேந்திரன், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அணுகிய போது, நயினார் நாகேந்திரன் உரிய பதிலை அளிக்கவில்லை. அதேபோல் டிடிவி தினகரனுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அமைதி காத்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவரும் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க தள்ளப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இருந்த போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பழைய காழ்ப்பும் சேர்ந்து, முக்குலத்தோர் சமூக தலைவர்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனையாக மாறி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications