மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் முறையாக அட்டாக்.. ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசிய மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசிய மோடி

    மதுரை: பிரதமர் நரேந்திர மோடி இன்றைய பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் மறைமுகமாக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

    தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான மோடியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமாக அரசியல் விமர்சகர்களால் இது பார்க்கப்பட்டது.

    மோடியின் அரசியல் பேச்சு

    மோடியின் அரசியல் பேச்சு

    மோடியின் பேச்சும் ஏறத்தாழ அதே போன்றுதான் இருந்து. தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களையும், கொண்டுவரப்போகும் திட்டங்களையும் மோடி பேசினார். ஆனால் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் அவர் மறக்கவில்லை.

    பாதுகாவலன்

    பாதுகாவலன்

    நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஊழலுக்கு எதிராக எங்கள் அரசு எடுத்துவரும் நடவடிக்கை, டெல்லி முதல் சென்னைவரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் நாட்டின் பாதுகாவலனாக உள்ள என்னை நீக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றிணைந்து எனக்கு எதிராக நின்றாலும் கூட, நான் எப்போதுமே ஏழைகளின் பக்கமே உறுதியாக நிற்பேன். இவ்வாறு நரேந்திர மோடி தனது உரையின் போது குறிப்பிட்டார்.

    மெகா கூட்டணி

    மெகா கூட்டணி

    மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, மமதா பானர்ஜி உள்ளிட்டோர் அடங்கிய மகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. மமதா பானர்ஜி சமீபத்தில் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கடும் வார்த்தைகளை உபயோகப் படுத்தினார். இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து டெல்லி வரை தனது நடவடிக்கைகள் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் மோடி.

    எதிர்மறை

    எதிர்மறை

    மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழகத்திலுள்ள சில கட்சிகள் எதிர்மறை விமர்சனம் செய்வதாகவும், தமிழக இளைஞர்கள் இவர்களிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் கூறினார் மோடி. இந்த பிரச்சினையில் தீவிரம் காட்டுவது திமுக என்பதும், திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

    பதிலடி

    பதிலடி

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து, ஸ்டாலின் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்தபோதிலும், திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார் மோடி. ஆனால் இப்போது பாஜக கூட்டணிக்கு, திமுக வருவதற்கு வாய்ப்பில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதால் பதிலடியை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    PM Narendra Modi Slams MK Stalin for his stand against BJP at Madurai BJP public meeting, This is the first attack from the PM towards MK Stalin after taking DMK chief post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X