முருகனுக்கு பொண்ணு கொடுத்த உரிமையில் கேட்கிறோம்! தீபத்தூணில் தீபமேற்றுங்கள்! நரிக்குறவர்கள் மனு
மதுரை: "முருகனுக்கு பெண் கொடுத்த உரிமையில் கேட்கிறோம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டும்" என நரிக்குறவரின மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முருகன், வள்ளி, ராமர், லட்சுமணன், விஷ்ணு வேடமிட்டு 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: "திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து மக்களின் பாரம்பரியம். அந்நிய படையெடுப்பு காரணமாக மலை மீது தீபம் ஏற்றுவது நின்று போனது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா நிர்வாகம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் தீபம் ஏற்ற அனுமதித்தால் மத கலவரம் ஏற்பட்டு விடும் என பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றன.
தமிழகத்தில் பெரும்பான்மையான இந்து மக்கள் வசிக்கும் நிலையிலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "முருகனுக்கு பெண் கொடுத்த உரிமையில் கேட்கிறோம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது மன வருத்தம் அளிக்கிறது. ஆகவே, தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த ராமரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தீபத்திருவிழாவின் போது கோயில் நிர்வாகத்தினர் வழக்கமாக ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தில் விளக்கேற்றினர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கிருந்த போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இந்த நிலையில் ராமரவிக்குமார், கோயில் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அது போல் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பினரும் தீபம் ஏற்ற வலியுறுத்தி பல வகைகளில் பிரச்சாரம் செய்து வருவது மக்களை ஈர்த்து வருகிறது. இந்து முன்னணியினர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு பொதுமக்களிடையே எத்தனை ஆதரவு உள்ளது என சமூகவலைதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆதரவு அதிகரித்து வருகிறது. தவிர, ஒவ்வொருவரும் "குன்றில் தீபம் ஏற்றுவோம்" என அச்சிடப்பட்ட டி-சர்ச்சை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அது போல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும் டிஸ்ப்ளேக்களிலும் "அங்கேயே தீபம் ஏற்றுவோம்" என வாசகத்துடன் கூடிய படங்களை வைத்துள்ளோம். இதை ஒவ்வொருத்தரும் செய்தால்தான் நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு திமுக அரசு வரும் என தெரிவித்துள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications