பலரிடம் பணமே இல்லை.. நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை.. மதுரையை விபூதி அடிக்கும் நிறுவனங்கள்!
மதுரை: தென் மாவட்டங்களில் ஏற்கனவே ஏலச்சீட்டு மோசடிகள் தாறுமாறாக உள்ளது. இவர்களிடம் பணம் போட்டால் திரும்ப வராதோ என்று பயந்து, பெரிய நிறுவனங்களாக ஆரம்பிக்கப்பட்ட நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை பல்வேறு நிறுவனங்களில் மக்கள் பணத்தை முதலீடு செய்தார்கள். ஆனால் பாருங்கள் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள். பணத்தை பறிகொடுத்து மக்கள் பரிதவிக்கிறார்கள்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. தென் மாவட்டங்களிலேயே பெரிய ஊர் என்றால் மதுரை தான். அங்குகூட சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகளோ பெரு நிறுவனங்களோ இல்லை. கடைகள், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பல ஊர்களின் முக்கிய சந்திப்பாக மதுரை இருப்பதால், வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. மற்றபடி தொழில் என்றால், விவசாயம் மட்டுமே.

மக்கள் பலர் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் வேலைக்கு சென்று பணம் ஈட்டுகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு சேமிக்கும் பணத்தில் சொந்த ஊரில் வீடு கட்டுகிறார்கள்,இல்லாவிட்டால் அதை வருங்காலத்தில் திருமணம், கல்வி போன்றவற்றுக்கு வேண்டும் என ஏலச்சீட்டு போடுகிறார்கள். நம்பிக்கையானவர்கள் என்று பக்கத்து வீடுகளில் சொல்வதை நம்பி ஏலச்சீட்டில் பணம் போடுகிறார்கள். அதேநேரம் மிகவும் தெரிந்தவர்கள், வசதியான வீடு வைத்துள்ளவர்கள் கேட்டால் கடன் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கொஞ்ச நாள் ஏலச்சீட்டுபணத்தை சரியாக கொடுத்துவிட்டு பின்னாளில் மொத்தமாக சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். இப்படி அழிந்த குடும்பங்கள் பல இருக்கின்றன தென் மாவட்டங்களில்.. இதேபோல் ஒரு வீட்டை காட்டி. 10 லட்சம், ஐந்து லட்சம் என்று பலரிடம் கடன் வாங்கும் சிலர், அப்படியே வட்டியை மட்டும் சில மாதம் கொடுத்துவிட்டு மொத்ததமாக சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்.இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் பணத்தை பெற முடியாமல், கடன் கொடுத்த எளிய மக்கள் வாங்க முடியாமல் அவர்களும் விபரீத முடிவுகளை நாடுகிறார்கள்.
இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. சரி ஏலச்சீட்டு, கடன் தான் நம்மை இப்படி ஏமாற்றுகிறதே என்று நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை பல்வேறு நிறுவனங்களில் மக்கள் பணத்தை முதலீடு செய்தார்கள். ஆனால் பாருங்கள் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள். சீட்டு கம்பெனி, தனியார் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம், நகைக்கடைகளில் பணம் போட்ட தென் மாவட்டங்கள் பலர் மொத்தமாக விபூதி அடிக்கப்பட்டுள்ளார்கள். கஷ்டப்பட்டு சேமித்து நல்ல நிலைக்கு வந்த மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பலரிடம் தற்போது பணமே இல்லை என்பது கசப்பான உண்மை.
ஒவ்வொரு ஊரையும் குறிவைத்து பல கோடிகளை, ரியல் எஸ்டேட் ஏலச்சீட்டு, நகைசீட்டு என்ற பெயரில் தென் மாவட்டம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் வலம் வந்து ஏமாற்றி ஏப்பம் விட்டுருக்கிறார்கள். கும்பல் கும்பலாக நடந்த இந்த கொள்ளை சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நம் நாட்டு சட்டப்படி கடன் கொடுத்தவர்களைவிட கடன் வாங்கியவர்களுக்கே பாதுகாப்பு அதிகம்..
அதுமட்டுமல்ல கடன் ஒருவருக்கு கொடுக்கும் போது இப்படித்தான் கொடுக்க வேண்டும். அதேபோல் ஏலச்சீட்டு, நகைச்சீட்டு போன்றவற்றில் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் இல்லாதவர்களிடம் போடக்கூடாது என்ற தெளிவு இல்லாத காரணத்தால், காவல் நிலையம், நீதிமன்றங்களை நாடும் போது பணம் கிடைக்க வழி கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
கடந்த சில மாதத்துக்கு முன்பு, "நியோ- மேக்ஸ்" என்ற ரியல் எஸ்டேட் நிறுவமும் அது சார்ந்த துணை நிறுவனங்களும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களிடம் பல கோடி பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து மதுரை பொருளாதார குற்றத் தடுப்பில் 100க்கணக்கானோர் புகார் அளித்துள்ளனர்.
இதன்படி அந்த நிறுவனங்கள் சார்ந்த இயக்குநர்கள், முகவர்கள் என 90-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் எந்த அளவிற்கு அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
இதனிடையே மதுரை மேலமாசி வீதியில் இயங்கி வந்த "பிரணவ் ஜூவல்லர்ஸ்" என்ற நிறுவனம், நகை, பணம் முதலீடு செய்வோருக்கு செய்கூலி, சேதாரமின்றி கூடுதல் நகையுடன் புதிய நகைகள் வழங்கும் என, ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, முதலீடுகளை கவர்ந்து முறைகேடு செய்துள்ளது. . இக்கடை மூலம் பாதிக்கப்பட்ட இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இழந்த பணத்தை மீட்க வழி தெரியாமல் அலைகிறார்கள். இந்த இரு சம்பவங்கள் சிறு உதாரணங்களே..
மக்களின் ஆசைகளை தூண்டிவிட்டு சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் குறித்து எத்தனை படம்வந்தாலும், எத்தனை விழிப்புணர்வு விஷயங்கள் வந்தாலும் மக்களும் மாறுவது இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் பேசி, மக்களை ஏமாற்றுபவர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். அதுவே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு. அதேபோல் அரசும் இதுபோன்ற போலி நிறுவனங்கள் உருவானால் உடனடியாக அலர்ட் செய்து, அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதுவும் சரியான தீர்வாக அமையும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications