நிர்மலா தேவிக்கு என்னாச்சு.. நெஞ்சுவலியா.. முதுகுவலியா.. மதுரையில் திடீர் பரபரப்பு
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நிர்மலாதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

மதுரை: உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு நிர்மலா தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில், மருத்துவ கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்ல முற்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோ வெளியானது.
இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்து கூறவில்லை
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக நிர்மலாதேவி அழைத்து வரப்படும் போதெல்லாம், எந்தவித கருத்தையும் கூறாமல் இருந்தவர், திடீரென 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

அதிர்ச்சி தகவல்
அப்போது, "எனக்கு மிரட்டல்கள் இருக்கிறது. சிபிசிஐடி தயார் செய்த வாக்குமூலங்கள் எல்லாம் போலியானவை. எனக்கு ஜாமீன் வழங்காததற்கு மிகப்பெரிய அரசியல் சதியே இருக்கிறது" என்று போட்டு உடைத்தார். நிர்மலாதேவி இப்படி சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

பசும்பொன் பாண்டியன்
இது சம்பந்தமாக அப்போது பேசிய அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன், "சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீனும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல.. நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

ராஜாஜி மருத்துவமனை
இந்நிலையில், நிர்மலாதேவிக்கு உடம்பு சரியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதில் குழப்பமான தகவல்களும் வெளியாகின.

சோர்வாகவே இருந்தார்
ஏற்கனவே சிறையில் அனுமதிக்கப்பட்டது முதல் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தார் நிர்மலாதேவி. எப்போது கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதும் சோர்வாகவே காணப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது என்று அவரது வக்கீல் 2 தினங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், இப்போது நிர்மலாதேவி ஆஸ்பத்திரியில் அனுமதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நெஞ்சு வலி என்று ஒரு தகவலும், முதுகுவலி என இன்னொரு தகவலும் வெளியாகி குழப்பத்தை கூட்டின. சிகிச்சைக்குப் பின்னர் நிர்மலா தேவி சிறைக்கு திரும்ப கூட்டிச் செல்லப்பட்டு விட்டார்.

பரபரப்பு
10 மாதமாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் மர்மமும் புரியாத நிலையில் சமீபத்தில்தான் அரசியல் நோக்கத்தால் தனக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக அவர் கூறிய நிலையில் உடல் நலக்கோளாறு என்று தகவல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் பாண்டியன்
இது சம்பந்தமாக அப்போது பேசிய அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன், "சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீனும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல.. நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை" என்று தெரிவித்திருந்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications