கள்ளழகர் திருவிழா.. மதுரையில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவு!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நாளை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று இரவு முதலே தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டும். இந்த நிலையில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நாளை காலை நடக்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பங்குபெறும் இந்த திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடத்தி முடிவடைந்த நிலையில், தற்போது உச்ச நிகழ்ச்சிக்கு மதுரையே தயாராகி வருகிறது. இதற்காக ஏற்கனவே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வதற்காக, ஏற்கனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகளவிலான கூட்டம் வரும் என்பதால், பொதுமக்கள் புகார் அளிக்க வைகை வீரன் என்ற செயலி போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் போது இளைஞர்கள் எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடக் கூடாது என்றும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி அதிமுக எம்எல்ஏல்-க்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும், வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறி இருக்கிறது. மதுரையின் முக்கியமான திருவிழா நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாதது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது. ஏனென்றால் வைகை ஆற்றங்கரையோரம் இன்று இரவு முதலே மக்கள் கூடுவார்கள். அப்போது இளைஞர்கள் மதுபோதையில் இருந்தால் அதிகளவில் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications