பாராசிட்டமால் மாத்திரையை மெடிக்கலில் வாங்க மருத்துவர் பரிந்துரை தேவையில்லை- தமிழக அரசு திட்டவட்டம்
மதுரை: பாராசிட்டமால் மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக, ஜோயல் சுகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கும் பொருளாகவே பாராசிட்டமால் உள்ளது.
காய்ச்சலைக் குறைக்க இந்த மருந்து பயன்படுகிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில், கொரோனா இல்லாத பிற காய்ச்சலாலும், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வழக்கு
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவது இல்லை. எனவே பாராசிட்டமால் மருந்துகளை பயன்படுத்தி மக்கள் தீர்வு கண்டு வருகின்றனர். ஆனால் மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் மருந்துகளை கொடுக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தட்டுப்பாடு இல்லை
எனவே மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் கொடுப்பதில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாராசிட்டமால் மருந்துகளை மருந்தகங்களில் கொடுக்கவும், எந்தவிதக் கட்டுப்பாடும், தட்டுப்பாடின்றியும் இது வினியோகம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

வழக்கு முடித்து வைப்பு
இந்த பொது நல வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாரசிட்டமால் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு மருத்துவரின் மருந்து சீட்டு பரிந்துரை தேவை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Recommended Video

டாக்டர்கள்
மருந்து சீட்டு இல்லாமல் காய்ச்சல் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும்போது, கொரோனா இருந்தாலும் வெளியே தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. பலருக்கும் அந்த நபர் பரப்பவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற விஷயங்களுக்கு டாக்டரை பார்ப்பதே நல்லது மக்களே.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications