மதுரையில் துப்பாக்கி முனையில் 1,000 பவுன் நகை பறிப்பு.. ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் அதிரடியாக கைது
மதுரை: ஓ.பன்னீர் செசல்வம் அணி மாவட்ட செயலாளரான பாலமுருகன் துப்பாக்கி முனையில் மூதாட்டியை மிரட்டி 1,000 பவுன் நகைகளை பறித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றி போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் குளிச்சிப்பட்டியை சேர்ந்த 72 வயதாகும் ராமுத்தாய்க்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன், கப்பலில் என்ஜினீயராக வேலை செய்கிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் இருக்கிறது. இந்த வீட்டில்தான் தற்போது ராமுத்தாய் தங்கி உள்ளார்.

இந்தநிலையில், நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்தை ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த சொத்துகளுக்கு காப்பாளராக பாலமுருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே இதற்கிடையே, ராமுத்தாயிடம் இருந்த நகை மற்றும் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து கையெழுத்து போடுமாறு மிரட்டினார்களாம் இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி, சொத்து ஆவணங்கள் மற்றும் 1,000 பவுன் நகைகளையும், சில வைர நகைகளையும் பறித்து கொண்டு தப்பினாராம்
இது குறித்து ராமுத்தாய் தல்லாகுளம் மற்றும் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. போலீசார், பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். கைதான பாலமுருகன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். பாலமுருகனின் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications