எப்படியாவது கலைக்கணும்! எடப்பாடிக்கு ஷாக் தரப்போகும் ஓபிஎஸ்! அவங்களையே கூப்பிட்டு பேசுறாராமே? ஓவரா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம்.

மதுரையில் நடக்க உள்ள அதிமுக மாநாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறாராம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

O Panneerselvam to play a spoil sport in Edappadi Palanisamy AIADMK Madurai meeting

ஏற்கனவே இந்த மாநாட்டிற்கான ஜோதி ஓட்டம் சென்னையில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி இந்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.

தேவர் சமுதாயம்: முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக முக்குலத்தோர் ஜாதியினரை ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து பிரித்து தங்களிடம் கொண்டு வர இவர்கள் திட்டமிட்டு உள்ளனராம்.

எடப்பாடிக்கு செக் வைக்கும் முக்குலத்தோர்: இந்த நிலையில்தான் இந்த நிலையில் அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம்.

அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.

முக்கியமாக எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மேற்கு மண்டல ஜாதியினருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி ஆகியோரை ஓரம்கட்டிவிட்டார். ஆர் பி உதயகுமாரை மட்டுமே வைத்துள்ளார். அவர் நடத்தும் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் சென்றால் அது நம்முடைய குலத்திற்கே இலுக்காக இருக்கும். அப்படி செய்ய வேண்டாம். அவர் தேவர் சிலைக்கு மரியாதை செய்வார். தேவருக்கு பூஜை செய்வார். இதெல்லாம் சின்ன சின்ன ஸ்டண்ட். இதை எல்லாம் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அவர் அதிகார ரீதியாக தேவர்கள், முக்குலத்தோர் யாரையும் தனக்கு பக்கத்திலேயே வைக்கவில்லை. அதனால் அவருக்கு ஆதரவு தருவது வேஸ்ட் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாராம்.

இதற்காக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+