பைக்கா இல்ல புஸ்வானமா.. பற்றி எரியும் ஓலா பைக்குகளால்.. கதிகலங்கிய கரூர், மதுரை
மதுரை: ஓலா இ-பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதாலும், பல்வேறு பழுதுகள் ஏற்படுவதாலும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், ஒரே நாளில் மதுரை மற்றும் கரூரில் ஓலா இ-பைக்குகள் பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஓலா. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொதுமக்களிடையே அந்த வாகனத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 37 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. ஓராண்டில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ஒருபக்கம் விற்பனையில் சாதனை படைத்து வந்தாலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், சில சமயங்களில் இந்த பழுதுகளால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சமீபத்தில் பெங்களூரில் ஓலா பைக்கை வாங்க வேண்டாம் என்று ஓலா ஸ்கூட்டரில் பதாகை வைத்து பொதுமக்களுக்கு பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கர்நாடகாவில் எலெக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை முறைப்படி சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஓலா ஷோரூமை பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் நடந்தது. பெட்ரோல் விற்கும் விலைக்கு இ-பைக்குகளை சில ஆயிரங்கள் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி வருகின்றனர். ஆனால், இ-பைக்குகளில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டு வருவதாலும், தீப்பிடித்து எரிவதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் மற்றும் மதுரையில் ஒரே நாளில் ஓலா இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், திருக்காம்பூலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஓலா மின்சார வாகனம் திடீரென சாலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
கரூர் மாவட்டம், வெள்ளையணை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மின்சார பேட்டரியில் இயங்கக் கூடிய ஓலா இ-பைக்கை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். இவர் தினமும் இந்த வாகனத்தின் மூலமாக அலுவலகத்துக்குச் சென்று வந்துள்ளார்.
அந்த வகையில், தினேஷ் அலுவலகத்துக்கு வழக்கம்போல ஓலா இ-பைக்கில் இன்று சென்றுள்ளார். அப்போது, சேலம் பைபாஸ் வழியாக திருக்காம்பூலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தினேஷ் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பே ஓலா மின்சார வாகனம் முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகை வந்தவுடனயே வாகனத்தை சாலையில் நிறுத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயில் எரிந்து சேதமான இந்த ஓலா இருசக்கர வாகனத்தின் மதிப்பு 1.47 லட்சம் என தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, மதுரை, தனக்கன்குளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஓலா பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான திருமங்கலத்துக்கு நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனக்கன்குளம் நெடுஞ்சாலையில் இருந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் பேட்டரி வைக்கப்பட்டதில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இந்நிலையில், புகை வந்த பகுதியில் இருந்து திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமைடந்தது. ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் ஓலா பைக்குகள் தீப்பிடித்து சேதமடைந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications