மதுரை டூ பசும்பொன்.. ஒரே காரில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் பயணம்.. ஷாக்கில் எடப்பாடி!
மதுரை: மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் இணைந்து பயணிப்பதாக தெரிய வந்துள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் இருவரும் தேவர் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தி இருப்பது புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். கோவையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்வதை செங்கோட்டையன் தவிர்த்தார்.

இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தில் திடீரென செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதன்பின் கோபியில் செங்கோட்டையன் ரோடு ஷோ சென்றதோடு, டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின் செங்கோட்டையனின் பாதை எந்தப் பக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. செங்கோட்டையனின் கருத்துக்களுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சட்டசபை கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகளை செங்கோட்டையன் பின்பற்றினார். இதனால் செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பக்கம் சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள செங்கோட்டையன் மதுரை வந்தார். இதன்பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பசும்பொன் சென்று தேவரின் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் சீற்றம் கொண்டு எழுந்த போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் சட்டசபையில் கூட ஓபிஎஸ் தரப்பை சந்திக்கவில்லை. இந்த நிலையில் தேவர் ஜெயந்தியையொட்டி இவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய 4 தரப்பும் ஒன்று சேர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைவது அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications