பாலமேடு ஜல்லிக்கட்டு.. வாடிவாசலை தாண்டிய காளைகள்.. 14 காளைகளை அடக்கிய பிரபாகரன்.. கார் பரிசு
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. 847 காளைகள் வாடி வாசலை தாண்டிய நிலையில் பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை பாலமேட்டில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டு அங்குள்ள மஞ்சள் மலையாற்றில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடி வாசலை தாண்டிய காளைகளை வீரர்கள் உற்சாகமாக விரட்டி பிடித்தனர். சில காளைகள்.. தொட்டுப்பார் என்று களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் யார் கைகளுக்கும் சிக்காமல் ஓடின. அந்த காளைகளுக்கு தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
இன்றைய தினம் 10 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 847க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 வீரர்கள் பங்கேற்றனர். காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த காரை பரிசாக வென்றார். கடந்த 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி பிரபாகரன் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள் விடுத்தவர் பிரபாகரன்.
சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.வாடிவாசலை தாண்டிய பல காளைகள் யார் கைகளிலும் சிக்கலாமல் ஓடினாலும் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. இதில் நீண்ட நேரம் நின்று தொட்டுப்பார்.. என்று சொல்லி வீரர்களுக்கு மரண பயத்தை காட்டிய புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வாகி காரை பரிசாக வென்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் மூன்று பேர் என இப்போட்டியில் 40 பேர் காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி விஜயராஜை காளை ஒன்று முட்டியது. அவருக்கு முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று அவனியாபுரத்திலும் இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளைய தினம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications