Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா நில ஆவணங்கள் போலி.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்களை பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இப்படி விறுவிறுப்பாகி உள்ள நிலையில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்களுக்கு மவுசும் ஒரேடியாக அதிகரித்துவிட்டது. இந்நிலையில், லஞ்சஒழிப்பு போலீசிலும், பத்திரப்பதிவு ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடமும் புகார் ஒன்று போயிருக்கிறது.. இந்த புகாரால், மதுரை வருவாய்த்துறை, பதிவுத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ல் மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை, நீண்ட காலமாகவே இந்த திட்டம் தாமதமாகி கொண்டிருக்கிறது..

Patta Land madurai aiim Registration department

அந்தவகையில், 9 வருடமாகவே எய்ம்ஸ் விவகாரம் இழுபறியிலும், சர்ச்சையிலும் உள்ளது. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது.

விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை

கடந்த ஆகஸ்ட் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு, L&T நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் வழங்கியது.. அதேபோல, கடந்த மே மாதம் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசும் வழங்கியது. இந்த மருத்துவமனைக்காக தலைவர், செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு,மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் முதல் கட்டுமான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.

சமீபத்தில், தென்காசி பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

எப்போது மருத்துவமனை திறக்கப்படும்?

ஆர்டிஐ கேள்விக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது. அதில், மருத்துவமனை திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வருகிற 2027 பிப்ரவரி மாதம் மக்களின் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இப்படி விறுவிறுப்பாகி உள்ள நிலையில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்களுக்கு மவுசும் ஒரேடியாக அதிகரித்துவிட்டது. இதையே சாக்காக வைத்து, போலி பட்டா மூலம் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது, ரூ.2 கோடி மதிப்புள்ள தன்னுடைய நிலங்களை போலி பட்டா மூலம் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

போலி நிலப்பட்டா - போலி பத்திரம்

எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் ஸ்டேஷன் என அடுத்தடுத்து அமைவதால் திருமங்கலம், கப்பலுார், தோப்பூர் பகுதி நிலங்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது.. இதனால், தோப்பூர், கரடிக்கல், உரப்பனுார் பகுதிகளில் பொதுமக்கள் முதலீடாக வாங்கி கண்காணிக்காமல் வைத்திருக்கும் நிலங்களை போலி பட்டா, போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கும் முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

திருமங்கலத்தைச் சேர்ந்த 75 வயது தங்கம் என்ற முன்னாள் ராணுவ வீரர், கடந்த 2014ல் சந்தோஷ்நகர், கோல்டன் சிட்டியில் 22 சென்ட் மதிப்புள்ள 3 பிளாட்டுகளை கிரையம் செய்து பட்டா பெற்றுள்ளார்.. ஆனால, இவரது நிலத்திற்கு திருமங்கலம் பஞ்சாச்சரம் என்பவர் பட்டா தயாரித்து விற்றுவிட்டாராம்.. எனவே, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார் தங்கம்.. இதையடுத்து, இந்த வழக்கில் 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

பட்டா, பத்திரம் தயாரிப்பு

இந்நிலையில் பஞ்சாச்சரம் தயாரித்த பட்டா அடிப்படையில் பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக திருமங்கலம் சார்பதிவாளர் பாண்டியராஜன் மீது குற்றம்சாட்டியுள்ள தங்கம், லஞ்சஒழிப்பு போலீசிலும், பத்திரப்பதிவு ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடமும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "மோசடி பட்டாவை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டர், DRO-க்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளநிலையில், எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என ஆர்டிஓ மூலம் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அப்படியிருந்தும், மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும்.. எனவே, இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் பாண்டியராஜன், பத்திர எழுத்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வருவாய்த்துறை, பதிவுத்துறை

புகாருக்கு உள்ளாகியிருக்கும் சார் பதிவாளர் பாண்டியராஜன் மீது ஏற்கனவே புகார் உள்ளது.. கடந்த மாதம் கிழவநேரியில் நிலம் வாங்கிய ஒருவருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கி, அந்த வழக்கில் கைதானவர் பாண்டியராஜன்.. இப்போது மீண்டும் புகாரில் சிக்கியிருப்பது மதுரை பதிவுத்துறை, வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+