”பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்.. மிக விரைவில் ஆதாரத்தை வெளியிடுவேன்!" பழ.நெடுமாறன் பேச்சு
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியது குறித்து பழ.நெடுமாறன் மேலும் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மதுரை: பிரபாகரன் உயிருடன் தான் இருப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் இது தொடர்பாக அவர் மேலும் சில கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக யுத்தம் நடந்தது. இது கடந்த 2009இல் இறுதிக்கட்டத்தை எட்டியது.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றதாக இலங்கை ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பான பிரபாகரனின் உடல் என்று வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தனர்.

பழ.நெடுமாறன்
அதன் பிறகு தொடர்ச்சியாகப் பிரபாகரன் குறித்துப் பல மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒரு தரப்பினர் பிரபாகரன் உயிரிழந்தது உண்மை என்றும் மற்றொரு தரப்பினர் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என்றும் கூறி வந்தனர். அவ்வப்போது இது தொடர்பான தகவல்கள் பரபரப்பைக் கிளப்பும். இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

உயிருடன் இருக்கிறார்
அப்போது பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறி அதிர வைத்தார். மேலும், பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் பிரபாகரன் இப்போது நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மட்டுமின்றி பிரபாகரன் விரைவில் வெளியே வருவார் என்றும் பிரபாகரன் அனுமதியுடன் தான் இப்போது இதை அறிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். இது இப்போது பேசுபொருளானது. பழ.நெடுமாறன் கருத்துக்குப் பலரும் பல விதமாகக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

மதுரை நிகழ்ச்சி
இதற்கிடையே இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் மேலும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மதுரை கே.கே.நகர்ப் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

ஆளுநர்
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அமைச்சர்களும் எடுக்கும் தீர்மானத்திற்குக் கையெழுத்திடுவதே ஆளுநரின் அதிகாரம்.. ஆனால், தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு.. அதற்கு ஒப்புதல் தர மறுப்பது மக்களாட்சி மாண்பைச் சீர்குலைக்கும் செயலாகும். இதற்குச் சர்வாதிகார போக்கே காரணம்.. மேலும், மத்திய அரசு நீதித்துறையையும் இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கின்றனர். இதுவும் கூட ஜனநாயக மாண்பைச் சீர்குலைத்துவிடும்.

புதிய நம்பிக்கை, உற்சாகம்
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாரமே உடன்படவில்லை என்று சொல்வது தவறானது.. எனது கருத்துக்கு உடன்படாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நான் சொன்னது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறிய பிறகு மக்களிடையே ஆதரவு அதிகரித்தே இருக்கிறது.

ஆதாரத்தை வெளியிடுவேன்
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் அதனை ஊடகத்தினரைச் சந்தித்து வெளியிடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார். 2009க்கு பிறகும் கூட சமூக வலைத்தளங்களில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் சொல்லி அவ்வப்போது தகவல்கள் பரவும். பிரபாகரன் உரிய நேரத்தில் வெளியே வருவார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிடுவார்கள். இந்தச் சூழலில் தான் பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications